அணைவுச் சேர்மங்கள்
அணைவுச் சேர்மம் (Coordination Compound) என்பது நிறைவுற்றதாகத் தோற்றமளிக்கும் வெவ்வேறு மூலக்கூறுகளின் சேர்க்கையினால் உருவாகும் சேர்மமாகும். இச்சேர்மமானது தனது தனித்துவத்தை திண்ம நிலையிலும், திரவ நிலையிலும் தக்க வைத்துக் கொள்ளும் தன்மை உடையது. மற்றொரு வகையான வரையறையானது, லூயி அமிலமும், லூயி காரமும் இணைந்து பெறப்படும் சேர்மங்கள் அணைவுச் சேர்மங்கள் எனவும், அவை தாம் பெற்றுள்ள அயனிகளைக் கரைசலில் தருவதில்லை எனவும் கூறுகிறது. அணைவுச் சேர்மம் என்பது ஒரு மைய உலோக அணுவையும், அதைச் சூழ்ந்துள்ள ஈனிகள் என்றழைக்கப்படும் அலோக அணுக்கள், அல்லது தொகுதிகள் ஆகியவற்றுடன் ஈதல் சகப்பிணைப்பு அல்லது ஈந்திணைப் பிணைப்பினைக் கொண்டுள்ள வேதியியல் அமைப்புகளைக் கொண்டுள்ள வேதிச் சேர்மமாகும்.[1][2]
அனணவுச் சேர்மங்களின் தன்மை
[தொகு]ஒரு எதிர்மின் அணைவுச் சேர்மத்தில் ஒரு எதிர்மின் அணைவு அயனியும், ஒரு நேர்மின் எளிய அயனியும் உள்ளன. ஒரு நேர்மின் அணைவுச் சேர்மத்தில் ஒரு நேர்மின் அணைவு அயனியும், ஒரு எதிர்மின் எளிய அயனியும் உள்ளன. சில அணைவுச் சேர்மங்களி் நேர்மின் மற்றும் எதிர்மின் அயனிகள் அணைவு அயனிகளாவே உள்ளன