உள்ளடக்கத்துக்குச் செல்

ஈந்தணைவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐந்து ஈந்தணைவிகளுடன் கூடிய கோபால்ட்டுத் தொகுதி [HCo(CO)4]

ஒருங்கிணைவு வேதியியலில், ஈந்தணைவி அல்லது ஈனி (ligand) என்பது, ஒரு ஒருங்கிணை தொகுதியில், நடுவில் உள்ள உலோக அணுவொன்றுடன் இணைந்திருக்கும் ஒரு மூலக்கூறு அல்லது அயனி ஆகும். உலோகத்துக்கும் ஈந்தணைவிக்கும் இடையில் உள்ள பிணைப்பின்போது பொதுவாக ஈந்தணைவியின் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட இலத்திரன்கள் உலோக அணுவுக்கு வழங்கப்பட்டிருக்கும். உலோக - ஈந்தணைவிப் பிணைப்பு சமவலுப் பிணைப்பாக அல்லது அயனிப் பிணைப்பாக இருக்கக்கூடும். மேலும், உலோக-ஈந்தணைவிப் பிணைப்பு வரிசை ஒன்றிலிருந்து மூன்று வரை இருக்கலாம். ஈந்தணைவிகள் பெரும்பாலும் லூயிசுக் காரங்களாக இருக்கின்றன. மிகவும் அரிதாக இவை லூயிசு அமிலமாகவும் இருக்கக்கூடும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஈந்தணைவி&oldid=4112477" இலிருந்து மீள்விக்கப்பட்டது