உள்ளடக்கத்துக்குச் செல்

கால்சியம் நைட்ரேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கால்சியம் நைட்ரேட்டு
picture of constituent ions
பெயர்கள்
வேறு பெயர்கள்
கால்க்சாபீடர், நைட்ரோகால்சைட்டு, நோர்வேய சால்ட்பீடர், சுண்ணாம்பு நைட்ரேட்டு
இனங்காட்டிகள்
10124-37-5 Y
13477-34-4 (டெட்ராஐதரேட்டு) N
ChemSpider 23336 Y
InChI
  • InChI=1S/Ca.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1 Y
    Key: ZCCIPPOKBCJFDN-UHFFFAOYSA-N Y
  • InChI=1/Ca.2NO3/c;2*2-1(3)4/q+2;2*-1
    Key: ZCCIPPOKBCJFDN-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24963
வே.ந.வி.ப எண் EW2985000
  • [Ca+2].[O-][N+]([O-])=O.[O-][N+]([O-])=O
UNII NF52F38N1N N
UN number 1454
பண்புகள்
Ca(NO3)2
வாய்ப்பாட்டு எடை 164.088 கி/மோல் (நீரற்ற சேர்மம்)
236.15 கி/மோல் (டெட்ராஐதரேட்டு)
தோற்றம் நிறமற்ற திண்மம்
நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி 2.504 கி/செமீ3 (நீரற்ற)
1.896 கி/செமீ3 (டெட்ராஐதரேட்டு)
உருகுநிலை 561 °C (1,042 °F; 834 K) (anhydrous)
42.7 °C (109 °F; 316 K) (tetrahydrate)
கொதிநிலை decomposes (anhydrous)
132 °C (270 °F; 405 K) (tetrahydrate)
நீரற்றது:
1212 கி/லி (20 °செ)
2710 கி/லி (40 °செ)
டெட்ராஐதரேட்டு:
1050 கி/லி (0 °செ)
1290 கி/லி (20 °செ)
3630 கி/லி (100 °செ)
கரைதிறன் அம்மோனியாவில் கரையும்
நைட்ரிக் காடியில் கிட்டத்தட்ட கரையாது.
ethanol-இல் கரைதிறன் 51.4 g/100 g (20 °C)
62.9 g/100 g (40 °C)[1]
methanol-இல் கரைதிறன் 134 g/100 g (10 °C)
144 g/100 g (40 °C)
158 g/100 g (60 °C)[1]
acetone-இல் கரைதிறன் 16.8 g/kg (20 °C)[1]
காடித்தன்மை எண் (pKa) 6.0
-45.9·10−6 cm3/mol
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம் (anhydrous)
ஒற்றைச்சாய்வு (tetrahydrate)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 1037
R-சொற்றொடர்கள் R22, R41
தீப்பற்றும் வெப்பநிலை Non-flammable
Lethal dose or concentration (LD, LC):
302 mg/kg (rat, oral)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் கால்சியம் சல்பேட்டு
கால்சியம் குளோரைடு
ஏனைய நேர் மின்அயனிகள் மக்னீசியம் நைட்ரேட்டு
இசுட்ரோன்சியம் நைட்ரேட்டு
பேரியம் நைட்ரேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

கால்சியம் நைட்ரேட் (Calcium nitrate) நோர்கெசல்பீட்டர் ( நோர்வே சால்ட்பீட்டர் ) என்றும் அழைக்கப்படுகிறது, இது Ca(NO3)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய ஒரு கனிமச் சேர்மம் ஆகும். இந்த நிறமற்ற உப்பு காற்றில் இருந்து ஈரப்பதத்தை உறிஞ்சி பொதுவாக டெட்ராஐதரேட்டாகக் காணப்படுகிறது. இது முக்கியமாக உரங்களில் ஒரு அங்கமாகப் பயன்படுத்தப்படுகிறது, ஆனால் பிற பயன்பாடுகளையும் கொண்டுள்ளது. நைட்ரோகால்சைட் என்பது ஒரு நீரேற்றமடைந்த கால்சியம் நைட்ரேட் கனிமத்தின் பெயர் ஆகும். கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் டெகாஹைட்ரேட் மற்றும் கால்சியம் பொட்டாசியம் நைட்ரேட் டெகாஐதரேட்டு உள்ளிட்ட பல்வேறு தொடர்புடைய உப்புகள் அறியப்படுகின்றன.[2]

உற்பத்தி மற்றும் வினைத்திறன்

[தொகு]

நோர்கெஸ்சால்ட்பீடர் 1905 ஆம் ஆண்டில் நார்வேயில் நோட்டோடென் எனுமிடத்தில் பிர்கலேண்டு-ஐட் முறை மூலம் தொகுக்கப்பட்டது. உலகின் பெரும்பாலான கால்சியம் நைட்ரேட் இப்போது போர்ஸ்ரூனில் தயாரிக்கப்படுகிறது.

நைட்ரிக் அமிலத்துடன் சுண்ணாம்புக்கல் (கால்சியம் கார்பனேட்) வினைப்படுத்துவதன் மூலமும் அதனைத் தொடர்ந்து அம்மோனியாவுடன் நடுநிலையாக்கப்படுவதன் மூலமும் இச்சேர்மம் தயாரிக்கப்படுகிறது:

CaCO 3 + 2 HNO 3 → Ca (NO 3 ) 2 + CO 2 + H 2 O.

இது ஒடா செயல்முறையின் இடைநிலை விளைபொருளும் ஆகும்:

Ca3(PO4)2 + 6 HNO3 + 12 H2O → 2 H3PO4 + 3 Ca(NO3)2 + 12 H2O

அம்மோனியம் நைட்ரேட் மற்றும் கால்சியம் ஐதராக்சைடு ஆகியவற்றின் நீர்க்கரைசலிலிருந்தும் இதை தயாரிக்கலாம்:

2 NH4 NO3 + Ca(OH)2 → Ca(NO3)2 + 2 NH4OH

தொடர்புடைய காரமண் உலோக நைட்ரேட்டுகளைப் போலவே, கால்சியம் நைட்ரேட் வெப்பமடையும் போது (500° செல்சியசில் தொடங்கி) சிதைவுற்று நைட்ரஜன் டை ஆக்சைடை வெளியிடுகிறது:[2]

2 Ca (NO 3 ) 2 → 2 CaO + 4 NO 2 + O 2 ΔH = 369 kJ / mol

பயன்பாடுகள்

[தொகு]

விவசாயத்தில் பயன்பாடு

[தொகு]

உர தரம் (15.5-0-0 + 19% Ca) பசுமைக்குடில் மற்றும் நீரியல் வளர்ப்பு வர்த்தகங்களில் பிரபலமானது; இது இரட்டை உப்பாக அம்மோனியம் நைட்ரேட் மற்றும் தண்ணீரைக் கொண்டுள்ளது. இது கால்சியம் அம்மோனியம் நைட்ரேட் என்று அழைக்கப்படுகிறது. அம்மோனியா இல்லாத மூலக்கூற்று வாய்ப்பாடுகளும் அறியப்படுகின்றன: Ca (NO3)2·4H2O (11.9-0-0 + 16.9 Ca) மற்றும் நீர்அற்ற கலவையாகவும் 17-0-0 + 23.6 Ca அறியப்படுகிறது. திரவ வடிவிலான ஒரு கலவையும் (9-0-0 + 11 Ca) நடைமுறையில் உள்ளது. ஒரு நீரற்ற, காற்றில் நிலைப்புத்தன்மை கொண்ட வழிப்பொருளான யூரியா அணைவுச் சேர்மமாகவும் Ca (NO3)2·4[OC(NH2)2] காணப்படுகிறது. இது கால்-யூரியா என விற்பனை செய்யப்படுகிறது.

கால்சியம் நைட்ரேட்டு சில தாவர நோய்களைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. உதாரணமாக, நீர்த்த கால்சியம் நைட்ரேட்டு மற்றும் கால்சியம் குளோரைடு தெளிப்பு ஆப்பிள் மரங்களில் கசப்புக் குழி மற்றும் தக்கைத் தடம் நோய்களைக் கட்டுப்படுத்தப் பயன்படுகிறது.[3]

கழிவு நீர் மேலாண்மை

[தொகு]

கால்சியம் நைட்ரேட் கழிவு நீர் மேலாண்மையில் துர்நாற்றம் வெளியேற்றத் தடுப்பில் பயன்படுத்தப்படுகிறது. கழிவு நீர் பதப்படுத்துதலுக்கு முந்தைய நிலையில்கழிவு நீர் அமைப்பில் குறைவான அளவில் ஆக்சிசன் கரைந்த நீர் தொடர்பான உயிரியலை நிறுவுவதை அடிப்படையாகக் கொண்டது. நைட்ரேட் முன்னிலையில், சல்பேட்டுகளுக்கான வளர்சிதை மாற்றம் நிறுத்தப்படுகிறது, இதனால் ஐதரசன் சல்பைடு உருவாதலைத் தடுக்கிறது.[4] கூடுதலாக, எளிதில் சிதைக்கக்கூடிய கரிமப் பொருட்கள் நுகரப்படுகின்றன. அவ்வாறில்லையெனில் வளியில்லா நிலைமைகள் கீழ்நோக்கிச் செல்தலையும், அத்தோடு தானே துர்நாற்றம் உமிழும் நிலையையும் விளைவிக்கும். இந்த கருத்தியலானது மிகையான கழிவு மேலாண்மைக்கும் பொருந்தும்.[5]

கற்காரை

[தொகு]

கற்காரைக் கலவைகளின் இறுகும் தன்மையை வேகப்படுத்த கால்சியம் நைட்ரேட்டு பயன்படுகிறது. கற்காரை மற்றும் காரையுடனான இந்த பயன்பர்ட இரண்டு விளைவுகளை அடிப்படையாகக் கொண்டது. கால்சியம் அயனியானது கால்சியம் ஐதராக்சைடின் உருவாக்கத்தை வேகப்படுத்துகிறது இதன் காரணமாக வீழ்படிவாதல் நிகழ்ந்து இறுகுதல் வேகப்படுத்தப்படுகிறது. இந்த விளைவானது, குளிர் பருவநிலை கற்காரை காரணிகள் மற்றும் சில ஒருங்கிணைந்த குழைவிப்பிகள் ஆகியவற்றிலும் பயன்படுகிறது.[6] நைட்ரேட்டு அயனி இரும்பு ஐதராக்சைடு உருவாதலுக்கும் வழிவகுக்கிறது. இதன் பாதுகாப்பு அடுக்கு அரிமானத்தைக் குறைத்து கற்காரை வலுப்படுத்துதலை அதிகரிக்கிறது.[7]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 Anatolievich, Kiper Ruslan. "Properties of substance: calcium nitrate". பார்க்கப்பட்ட நாள் 2015-09-09.
  2. 2.0 2.1 Wolfgang Laue, Michael Thiemann, Erich Scheibler, Karl Wilhelm Wiegand "Nitrates and Nitrites" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, 2002, Wiley-VCH, Weinheim.எஆசு:10.1002/14356007.a17_265. Article Online Posting Date: June 15, 2000
  3. "Bitter Pit and Cork Spot". University of Wisconsin-Extension Cooperative Extension. UW-Madison, Dept of Horticulture.
  4. Bentzen, G; Smith, A; Bennett, D; Webster, N; Reinholt, F; Sletholt, E; Hobson, J (1995). "Controlled dosing of nitrate for prevention of H2S in a sewer network and the effects on the subsequent treatment process". Water Science and Technology 31 (7): 293. doi:10.1016/0273-1223(95)00346-O. https://archive.org/details/sim_water-science-and-technology_1995_31_7/page/293. 
  5. Einarsen, A.M.; ÆeesØy, A.; Rasmussen, A. I.; Bungum, S.; Sveberg, M. (2000). "Biological prevention and removal of hydrogen sulphide in sludge at Lillehammer Wastewater Treatment Plant". Water Sci. Technol. 41 (6): 175–187. doi:10.2166/wst.2000.0107. 
  6. Justines, H. (2010) "Calcium Nitrate as a Multifunctional Concrete Admixture" Concrete Magazine, Vol 44, No. 1, p.34. பன்னாட்டுத் தர தொடர் எண் 0010-5317
  7. Al-Amoudi, Omar S.Baghabra; Maslehuddin, Mohammed; Lashari, A.N; Almusallam, Abdullah A (2003). "Effectiveness of corrosion inhibitors in contaminated concrete". Cement and Concrete Composites 25 (4–5): 439. doi:10.1016/S0958-9465(02)00084-7. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கால்சியம்_நைட்ரேட்டு&oldid=3520686" இலிருந்து மீள்விக்கப்பட்டது