முப்பாசுபாரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முப்பாசுபாரிக் அமிலம்
Structure of triphosphoric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைபாசுபனோ ஐதரசன் பாசுபேட்டு
இனங்காட்டிகள்
10380-08-2 Y
InChI
  • InChI=1S/H5O10P3/c1-11(2,3)9-13(7,8)10-12(4,5)6/h(H,7,8)(H2,1,2,3)(H2,4, 5,6)
பண்புகள்
H5P3O10
வாய்ப்பாட்டு எடை 257.95 கி/மோல்
காடித்தன்மை எண் (pKa) சிறியது, சிறியது, 2.30, 6.50, 9.24
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் அரிக்கும் (C)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

முப்பாசுபாரிக் அமிலம் (Triphosphoric acid) என்பது H5P3O10, என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடன் கூடிய ஒர் அமிலமாகும். இது பல்பாசுபாரிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. பாசுபாரிக் அமிலத்தின் குறுக்க வடிவம் முப்பாசுபாரிக் அமிலமாகும். பாசுபாரிக் அமிலக் ) குடும்பத்தில், பைரோபாசுபாரிக் அமிலத்திற்கு ( H4P2O7 ) அடுத்ததாக காணப்படும் மற்றொரு பல்பாசுபாரிக் அமிலம் முப்பாசுபாரிக் அமிலமாகும். பைரோபாசுபாரிக் அமிலம் இருபாசுபாரிக் அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது.

அடினோசின் முப்பாசுபேட்டு (அ.மு.பா.) போன்ற சேர்மங்கள் யாவும் முப்பாசுபாரிக் அமிலத்தினுடைய எசுத்தர்கள் ஆகும்.

முப்பாசுபாரிக் அமிலம் படிகவடிவில் தயாரிக்கப்படுவதில்லை. ஒட்டுமொத்தமாக H5P3O10 என்ற சமநிலை கலவையில் 18 சதவீதம்முப்பாசுபாரிக் அமிலம் காணப்படுகிறது. சுழி பாகை செல்சியசு வெப்பநிலையில், சோடியம் முப்பாசுபேட்டு சேர்மத்தை அயனிப் பரிமாற்ற வினையினால் தூய முப்பாசுபாரிக் அமிலக் கரைசலைத் தயாரிக்கலாம்[1].

முப்பாசுபாரிக் அமிலத்தின் பல்வேறு வகையான அமிலத்தன்மை எண்கள் (pKa ) அறியப்படுகின்றன. 1.0 ; 2.2 ; 2.3 ; 5.7 ; 8.5,[1] 1.0 ; 2.2 ; 2.3 ; 3.7 ; 8.5 [2][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Corbridge, D. (1995). "Chapter 3: Phosphates". Studies in inorganic Chemistry vol. 20. Elsevier Science B.V. pp. 169–305. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-444-89307-5. பார்க்கப்பட்ட நாள் January 30, 2015. – via ScienceDirect (Subscription may be required or content may be available in libraries.)
  2. Holleman, A. F.; Wiberg, E. (2001), Inorganic Chemistry, San Diego: Academic Press, p. 729, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
"https://ta.wikipedia.org/w/index.php?title=முப்பாசுபாரிக்_அமிலம்&oldid=2747119" இலிருந்து மீள்விக்கப்பட்டது