ஐப்போநைட்ரசு அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐப்போநைட்ரசு அமிலம்
Hypobromous acid.png
Space-filling model of hypobromous acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐப்போபுரோமசு அமிலம், புரோமிக்(I) அமிலம்
இனங்காட்டிகள்
13517-11-8 N
ChEBI CHEBI:29249 Yes check.svgY
ChemSpider 75379 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 83547
பண்புகள்
HBrO
வாய்ப்பாட்டு எடை 96.911
அடர்த்தி 2.470 கி/செ.மீ
கொதிநிலை 20–25 °C (68–77 °F; 293–298 K)
காடித்தன்மை எண் (pKa) 8.65
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஐப்போநைட்ரசு அமிலம் (Hyponitrous acid) H2N2O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச்சேர்மம் ஆகும். HON=NOH என்ற அமைப்பு வாய்ப்பாடாகவும் இந்த சேர்மத்தை எழுதமுடியும். நைட்ரமைடு ((H2N−NO2) சேர்மத்திற்கு இது ஒரு மாற்றியனாகும். வெண்மை நிறப் படிகங்களாக உருவாகும் இச்சேர்மம் உலர்நிலையில் வெடிக்கும் நிலையில் காணப்படுகிறது[1].

ஐப்போநைட்ரசு அமிலம் நீர்த்தக் கரைசலில் ஒரு வலிமை குறைந்த அமிலமாகும் (pKa1 = 7.21, pKa2 = 11.54) N2O ஆகவும், தண்ணீராகவும் இது சிதைவடைகிறது. 25° செல்சியசில் pH 1–3 அமிலக்கார நிலையில் இதனுடைய அரைவாழ்வுக் காலம் 16 நாட்களாகும்[1].

H2N2O2 → H2O + N2O

ஐப்போநைட்ரசு அமிலம் இரண்டு வரிசைகளாக உப்புகளை உருவாக்குகிறது. [HON=NO]− எதிர்மின் அயனிகளைக் கொண்ட அமில ஐப்போநைட்ரைட்டுகள் மற்றும் [ON=NO]2− எதிர்மின் அயனிகளைக் கொண்ட ஐப்போநைட்ரைட்டுகள் என்பன இவ்விரண்டு வரிசை உப்புகளாகும்[1].

ஐப்போநைட்ரைட்டு அயனியை [ON=NO]2− நீர்த்தக் கரைசலில் இரண்டு வகையான வழிகளில் தயாரிக்க முடியும். கரிம நைட்ரைட்டுகளை உபயோகித்து சோடியம் உப்புகள் தயாரிப்பது ஒரு வழியாகும்:[2]

RONO + NH2OH + 2 EtONa → Na2N2O2 + ROH + 2 EtOH

சோடியம் நைட்ரைட்டுடன் சோடியம் பாதரசக்கலவையைச் சேர்த்து ஒடுக்கம் செய்து ஐப்போநைட்ரைட்டு அயனியை தயாரிப்பது மற்றொரு வழிமுறையாகும்</ref>

2 NaNO2 + 4 Na(Hg) + 2 H2O → Na2N2O2 + 4 NaOH + 4 Hg.

கரையாத வெள்ளி உப்பை வெள்ளி நைட்ரேட்டு கரைசலைச் சேர்த்து வீழ்படிவாக்க முடியும்.

Na2N2O2 + 2 AgNO3 → Ag2N2O2 + 2 NaNO3

தூய்மையான அமிலத்தை வெள்ளி(I) ஐப்போநைட்ரைட்டும் ஈதர் கலந்த நீரிலி HCl உம் சேர்த்து தயாரிக்கலாம்.

Ag2N2O2 + 2 HCl → H2N2O2 + 2 AgCl

மறுபக்க மற்றும் ஒருபக்க மாற்றியன்கள் என்ற இரண்டு வகையான அமைப்புகளில் ஐப்போநைட்ரசு அமிலம் காணப்படுவதற்கு சாத்தியங்கள் உண்டு. திண்ம நிலையிலுள்ள Na2N2O2•5H2O மறுபக்க வடிவம் என்று உறுதியாகக் கூறலாம். நிறமாலைத் தரவுகளும் தூய்மையான அமிலம் மறுபக்க வடிவமைப்பிலுள்ளதாகத் தெரிவிக்கிறது. Na2N2O2 என்ற சோடியம் உப்புடன் Na2O வும் வாயுநிலை N2O வும் சேர்த்து ஒருபக்க மாற்றியனைத் தயாரிக்க முடியும்[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Wiberg, Egon; Holleman, Arnold Frederick (2001). Inorganic Chemistry. Elsevier. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 
  2. 2.0 2.1 Catherine E. Housecroft; Alan G. Sharpe (2008). "Chapter 15: The group 15 elements". Inorganic Chemistry (3rd ). Pearson. பக். 468. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-13-175553-6. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐப்போநைட்ரசு_அமிலம்&oldid=2167882" இருந்து மீள்விக்கப்பட்டது