அமிடோசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வேதியியலில் அமிடோசன் (Amidogen) என்பது ஒரு தனி உறுப்புச் சேர்மமாகும். நைட்ரசன், ஐதரசன் தனிமங்கள் சேர்ந்து உருவாகும் இச்சேர்மத்தின் மூலக்கூற்று வாய்பாடு NH2 ஆகும். அமினோத் தொகுதியின் ஓர் உறுப்பினரான இச்சேர்மம், ஓர் ஐதரசன் நீக்கப்பட்ட அமோனியாவாகக் கருதப்படுகிறது. பீனெத்திலமீன்கள் போன்ற பல சேர்மங்களில் ஒரு பகுதிப்பொருளாகவும் அமிடோசன் காணப்படுகிறது. இதுவரையில் இச்சேர்மம் தனிநிலையில் தனிமைப்படுத்தப்படவில்லை[1].

மேற்கோள்கள்[தொகு]

  1. die.net. "Aminogen". Archived from the original on பிப்ரவரி 21, 2013. பார்க்கப்பட்ட நாள் May 16, 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=அமிடோசன்&oldid=3792123" இலிருந்து மீள்விக்கப்பட்டது