ஐதரசன் தெலூரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஐதரசன் தெலூரைடு
Hydrogen telluride
Structural diagram of the hydrogen telluride molecule
Structural diagram of the hydrogen telluride molecule
Space-filling model of the hydrogen telluride molecule
Space-filling model of the hydrogen telluride molecule
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
ஐதரசன் தெலூரைடு
வேறு பெயர்கள்
ஐதரோதெலூரிக் அமிலம்
தெலேன்
தெலூரியம் ஐதரைடு
இனங்காட்டிகள்
7783-09-7 Y
பப்கெம் 21765
பண்புகள்
H2Te
வாய்ப்பாட்டு எடை 129.6158 கி மோல்−1
தோற்றம் நிறமற்ற வாயு
அடர்த்தி 3.310 கி/செ.மீ3, வாயு
2.57 கி/செ.மீ3 (−20 °செ, திரவம்)
உருகுநிலை −49 °C (−56 °F; 224 K)[1]
கொதிநிலை −2.2 °C (28.0 °F; 270.9 K) (−2 °செக்கு மேல் நிலையற்றது )
0.70 கி/100 மி.லி
காடித்தன்மை எண் (pKa) 2.6
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
0.7684 கியூ/கி
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் நச்சு
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் H2O
H2S
H2Se
H2Po
ஏனைய நேர் மின்அயனிகள் Na2Te
Ag2Te
K2Te
Rb2Te
Cs2Te
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

ஐதரசன் தெலூரைடு (Hydrogen telluride) என்பது H2Te. என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தெலூரியத்தின் எளிய ஐதரைடு சேர்மமான இது மிக அரிதாகவே காணப்படுகிறது. ஏனெனில் ஐதரசன் தெலூரைடு மிகவிரைவாக இதன் பகுதிப் பொருட்களாகச் சிதைவடைந்து விடுகிறது. இருப்பினும், இதனுடைய வளிமநிலையால் மிகக் குறைவான அடர்த்தியுடன் நீண்ட நேரம் நிலைப்புத்தன்மையுடன் இருக்கமுடியும். இதை அழுகும் பூண்டின் நெடியைக் கொண்டு உணர முடியும். அதிகமான அடர்த்தி நிலைகளில் கலக்கும் அழுகல் நாற்றம் மூலமாகவும் உணரலாம். Te–H பிணைப்பைக் கொண்ட பெரும்பாலான சேர்மங்கள் எளிதில் ஐதரசனை இழப்பதால் அவை நிலைப்புத் தன்மையற்றுக் காணப்படுகின்றன. வேதி முறை மற்றும் அமைப்பு முறைகளின்படி ஐதரசன் தெலூரைடானது ஐதரசன் செலினைடை ஒத்து இருக்கிறது. இரண்டுமே அமிலத்தன்மையுடன் காணப்படுகின்றன. H–Te–H பிணைப்புகளின் பிணைப்புக் கோணம் 90 0 ஆகும். ஆவியாகும் தெலூரியம் சேர்மங்கள் விரும்பத்தகாத அழுகிய பூண்டின் நெடியுடையனவாக இருக்கின்றன[2].

தொகுப்பு முறை[தொகு]

Al2Te3 மற்றும் Na2Te [3] போன்ற Te2 உப்புகளை அமிலமாக்கல் மூலம் ஐதரசன் தெலூரைடைத் தயாரிக்க முடியும். சோடியம் மற்றும் தெலூரியம் தனிமங்களை நீரற்ற அமோனியாவுடன் வினைபடுத்துவதன் வழியாக Na2Te சேர்மத்தைப் பெறமுடியும். இவ்வினையில் இடைநிலையாக உருவாகும் HTe நிலைப்புத்தன்மை கொண்ட ஒரு அயனியாகும். தெலூரியத்தை NaBH4 உடன் சேர்த்து ஒடுக்குதல் மூலம் NaHTe சேர்மத்தைத் தயாரிக்க முடியும்.[3]

ஆய்வகத் தயாரிப்பு[தொகு]

பொதுவாக நேர் மின்னேற்கும் தெலூரைடு வழிப்பொருட்களை[4] நீராற்பகுத்து தெலூரியம் ஐதரைடுகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக அலுமினியம் தெலூரைடில் இருந்து தயாரிப்பதைக் கூறலாம்.

Al2Te3 + 6 H2O → 2 Al(OH)3 + 3 H2Te

மக்னீசியம் மற்றும் கார உலோக தெலூரைடுகளையும் நீராற்பகுக்கலாம். தெலூரியம் ஐதரைடு அமிலத்தன்மையுடன் இருப்பதால், பொதுவாக இச்செயல் முறைக்கு அமிலம் தேவைப்படுகிறது. மின்னாற்பகுப்பு முறைகளும் வளர்ச்சியடைந்து வருகின்றன.[5]

பண்புகள்[தொகு]

ஐதரசன் தெலூரைடு ஓரு வெப்பங்கொள் சேர்மமாகும். காற்றில் நிலைப்புத் தன்மை இல்லாமலிருப்பதால் எளிதாக தண்ணீர் மற்றும் தெலூரியமாக ஆக்சிசனேற்றம் அடைகிறது:[6]

2 H
2
Te
+ O
2
→ 2 H
2
O
+ 2 Te

கிட்டத்தட்ட பாசுபாரிக் அமிலத்தினை [6](Ka = 8.1×10−3) ஒத்த அமிலத்தன்மை எண்ணைக் 2.3×10−3.கொண்டுள்ள ஐதரசன் தெலூரைடு பல உலோகங்களுடன் வினைபுரிந்து தெலூரைடுகளைக் கொடுக்கிறது.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lide, David R., தொகுப்பாசிரியர் (2006). CRC Handbook of Chemistry and Physics (87th ). Boca Raton, FL: CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0487-3. 
  2. Greenwood, N. N.; & Earnshaw, A. (1997). Chemistry of the Elements (2nd Edn.), Oxford:Butterworth-Heinemann. ISBN 0-7506-3365-4.
  3. 3.0 3.1 Nicola Petragnani; Hélio A. Stefani (2007). Tellurium in organic synthesis. Best synthetic methods (2nd ). Academic Press. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-045310-4. 
  4. Shriver, Atkins. Inorganic Chemistry, Fifth Edition. W. H. Freeman and Company, New York, 2010; pp 407.
  5. F. Fehér, "Hydrogen Telluride" in Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed. Edited by G. Brauer, Academic Press, 1963, NY. Vol. 1. pp. 438.
  6. 6.0 6.1 Egon Wiberg; Arnold Frederick Holleman (2001). Nils Wiberg. ed. Inorganic chemistry. translated by Mary Eagleson. Academic Press. பக். 589. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-352651-5. 
  7. Henry Enfield Roscoe; Carl Schorlemmer (1878). A treatise on chemistry. 1. Appleton. பக். 367–368. 

இவற்றையும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐதரசன்_தெலூரைடு&oldid=2696356" இலிருந்து மீள்விக்கப்பட்டது