பைரோபாசுபாரிக் காடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பைரோபாசுபாரிக் காடி
Chemical structure of pyrophosphoric acid
3D model of pyrophosphoric acid
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
இருபாசுபாரிக் காடி
μ-ஆக்சிடோ-பிசு(ஈரைதராக்சிடோ ஆக்சிடோபாசுபரசு)
வேறு பெயர்கள்
இருபாசுபாரிக் அமிலம்
இனங்காட்டிகள்
2466-09-3 Yes check.svgY
ChEBI CHEBI:29888 Yes check.svgY
ChEMBL ChEMBL1160571 Yes check.svgY
ChemSpider 996 Yes check.svgY
IUPHAR/BPS
3151
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 1023
UNII 4E862E7GRQ Yes check.svgY
பண்புகள்
H4P2O7
வாய்ப்பாட்டு எடை 177.97 கி/மோல்
உருகுநிலை
நன்றாக கரையும்
கரைதிறன் ஆல்ககால், ஈதர் போன்றவற்றில் நன்றாகக் கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பைரோபாசுபாரிக் காடி (Pyrophosphoric acid) H4P2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இருபாசுபாரிக் காடி, பைரோபாசுபாரிக் அமிலம், இருபாசுபாரிக் அமிலம் என்ற பெயர்களாலும் இதை அழைக்கலாம். [(HO)2P(O)]2O. என்று விரிவாகவும் இதன் மூலக்கூற்று வாய்ப்பாட்டை விளக்கியும் எழுதலாம். பைரோபாசுபாரிக் காடி மணமற்றதாகவும் நிறமற்றதாகவும் காணப்படுகிறது. தண்ணீர், டை எத்தில் ஈதர் மற்றும் எத்தில் ஆல்ககால் போன்ற கரைப்பான்களில் கரைகிறது.

நீரற்ற நிலை பைரோபாசுபாரிக் அமிலம் இரண்டு வெவ்வேறு வடிவங்களில் படிகமாகிறது. இவை முறையே 54.3 மற்றும் 71.5 °செல்சியசு வெப்பநிலையில் உருகுகின்றன. பைரோபாசுபாரிக் காடி பாசுபாரிக் அமிலத்தை தயாரிக்க உதவும் முக்கிய ஆதாரமான பாலிபாசுபாரிக் அமிலத்தின் ஒரு அங்கமாகும்.[1] பைரோபாசுபாரிக் காடியின் எதிர்மின் அயனிகள், உப்புகள், எசுத்தர்கள் போன்றவற்றை பைரோபாசுபேட்டுகள் என்று அழைப்பர்.

தயாரிப்பு[தொகு]

பாசுபாரிக் அமிலத்துடன் பாசுபோரைல் குளோரைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் பைரோபாசுபாரிக் காடி உருவாகிறது.:[2]

5 H3PO4 + POCl33 H4P2O7 + 3 HCl

சோடியம் பைரோபாசுபேட்டிலிருந்து அயனிப் பரிமாற்ற வினை அல்லது காரீய பைரோபாசுபேட்டுடன் ஐதரசன் சல்பைடை சேர்த்து சூடுபடுத்தியும் பைரோபாசுபாரிக் காடியை உருவாக்க இயலும்.[1]

வினைகள்[தொகு]

உருகும்போது, பைரோபாசுபாரிக் அமிலம் விரைவாக பாசுபாரிக் அமிலம், பைரோபாசுபாரிக் அமிலம் மற்றும் பாலிபாசுபாரிக் அமிலங்களின் சமநிலை கலவையாக மாறுகிறது. பைரோபாசுபாரிக் அமிலத்தின் எடையின் சதவீதம் சுமார் 40% ஆகும். உருகிய நிலைஅயிலிருந்து இதை மறுபடிகமாக்குவது கடினம் குளிர்ந்த நீரில் கரையக்கூடியது என்றாலும், அனைத்து பாலிபாசுபாரிக் அமிலங்களைப் போலவே பைரோபாசுபாரிக் அமிலமும் நீராற்பகுப்புக்கு உட்படுகிறது.[3]

H4P2O7 + H2O is in equilibrium with 2H3PO4

பைரோபாசுபாரிக் அமிலம் ஒரு நடுத்தர வலுவான கனிம அமிலம் ஆகும்.

பாதுகாப்பு[தொகு]

பைரோபாசுபாரிக் அமிலம் அரிக்கும் தன்மை கொண்டதாக இருந்தாலும், இது நச்சுத்தன்மை வாய்ந்ததாக தெரியவில்லை.[4]

வரலாறு[தொகு]

பைரோபாசுபாரிக் அமிலம் என்ற பெயர் 1827 ஆம் ஆண்டில் "கிளாசுகோவின் கிளார்க்" என்பவரால் வழங்கப்பட்டது. சோடியம் பாசுபேட்டு உப்பை செம்பழுப்பு வெப்பநிலைக்கு சூடாக்குவதைத் தொடர்ந்து கண்டுபிடிப்புக்கு பெருமை சேர்த்தார். பாசுபாரிக் அமிலத்தை செம்பழுப்பு வெப்பநிலைக்கு சூடாக்கும் போது பைரோபாசுபாரிக் அமிலம் உருவாகிறது. இது சூடான நீரில் கரைக்கப்பட்டு பாசுபாரிக் அமிலமாக மாற்றப்பட்டது.[5]

இவற்றையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Havelange, Sébastien; Lierde, Nicolas; Germeau, Alain; Martins, Emmanuel; Theys, Tibaut; Sonveaux, Marc; Toussaint, Claudia; Schrödter, Klaus et al. (2022). "Phosphoric Acid and Phosphates". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. பக். 1–55. doi:10.1002/14356007.a19_465.pub4. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9783527303854. 
  2. R. Klement (1963). "Condensed Orthophosphates". in G. Brauer. Handbook of Preparative Inorganic Chemistry, 2nd Ed.. 2. NY,NY: Academic Press. பக். 546. 
  3. Corbridge, D. (1995). "Chapter 3: Phosphates". Studies in inorganic Chemistry vol. 20. Elsevier Science B.V.. பக். 169–305. doi:10.1016/B978-0-444-89307-9.50008-8. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-444-89307-5. 
  4. Material Safety Data Sheet: Pyrophosphoric acid MSDS பரணிடப்பட்டது 2016-03-03 at the வந்தவழி இயந்திரம் www.sciencelab.com
  5. Beck, Lewis Caleb (1834). A Manual of Chemistry: Containing a Condensed View of the Present State of the Science, with Copious References to More Extensive Treatises, Original Papers, Etc. E.W & C Skinner. பக். 160. https://books.google.com/books?id=wlE6AQAAMAAJ&q=A+Manual+of+Chemistry%3A+Containing+a+Condensed+View+of+the+Present+State. பார்த்த நாள்: January 30, 2015. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பைரோபாசுபாரிக்_காடி&oldid=3574323" இருந்து மீள்விக்கப்பட்டது