ஆர்த்தோ அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆர்த்தோ அமிலங்கள் (Ortho acids) என்பவை ஆர்த்தோபாசுபாரிக் அமிலம் போன்ற மிகுந்த ஐதராக்சிலேற்றம் பெற்ற ஓர் அமிலமாகும். பொதுவாக, ஒரு தனிமம் பல ஆக்சோ அமிலங்களாக உருவாக முடியும் போது அவை ஆர்த்தோ, மெட்டா அல்லது பைரோவமிலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஆர்த்தோ அமிலமே மிகவும் நீரேற்றம் கொண்டதாக இருக்கிறது [1].

கரிம வேதியியல் ஆர்த்தோ அமிலங்களின் பொதுக் கட்டமைப்பு RC (OH) 3 என்ற அமைப்புடன் நீரேற்ற கார்பாக்சிலிக் அமிலங்களைப் போலிருக்கிறது. ஆர்த்தோகார்பானிக் அமிலம் (C(OH)4) பொதுவாக இவ்வகைபாட்டின் ஒரு உறுப்பினராகக் கருதப்படுகிறது[2]. இந்த சேர்மங்கள் யாவும் நிலைத்தன்மையற்று காணப்படுகின்றன. இருப்பினும் இவற்றோடு தொடர்பு கொண்ட ஆர்த்தோயெசுத்தர்கள் (RC(OR’)3) நிலைத்தன்மை கொண்டும் அதிக வேதியியல் தன்மைகளையும் பெற்றுள்ளன. இதற்குச் சமமான நைட்ரசன் சேர்மங்களும் குவானிடின்களுடன் கருத்தியலாக நெருங்கிய உலக ஒப்புமையுடன் இருப்பதாகக் கருதப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Prakash, Satya (1945). Advanced inorganic chemistry. New Delhi: S. Chand & Company Ltd.. பக். 733. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788121902632. 
  2. தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "ortho acids". Compendium of Chemical Terminology Internet edition.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்த்தோ_அமிலம்&oldid=2400922" இலிருந்து மீள்விக்கப்பட்டது