பாஸ்பீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாஸ்பீன்
பாஸ்பீன்
Phosphine-3D-balls.png
Phosphine-underside-3D-vdW.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பாஸ்பேன்
வேறு பெயர்கள்
Phosphamine
Phosphorus trihydride
Phosphorated hydrogen
இனங்காட்டிகள்
7803-51-2 Yes check.svgY
ChEBI CHEBI:30278 Yes check.svgY
ChemSpider 22814 Yes check.svgY
EC number 232-260-8
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 24404
வே.ந.வி.ப எண் SY7525000
UN number 2199
பண்புகள்
PH3
வாய்ப்பாட்டு எடை 33.99758 g/mol
தோற்றம் colorless gas
அடர்த்தி 1.379 g/l, gas (25 °C)
உருகுநிலை
கொதிநிலை −87.7 °C (−125.9 °F; 185.5 K)
31.2 mg/100 ml (17 °C)
பிசுக்குமை 1.1 x 10−5 Pa s
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.58 டெ
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
5 kJ·mol−1[1]
நியம மோலார்
எந்திரோப்பி So298
210 J·mol−1·K−1[1]
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் ICSC 0694
ஈயூ வகைப்பாடு Highly flammable (F+)
Very toxic (T+)
Corrosive (C)
Dangerous for the environment (N)
R-சொற்றொடர்கள் R12, R17, R26, R34, R50
S-சொற்றொடர்கள் (S1/2), S28, S36/37, S45, S61, S63
தீப்பற்றும் வெப்பநிலை flammable gas
Autoignition
temperature
38 °C (100 °F; 311 K) see text
வெடிபொருள் வரம்புகள் 1.8% – ?
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் நவச்சாரியம்
Arsine
சிடைபின்
Bismuthine
தொடர்புடைய சேர்மங்கள் Trimethylphosphine
Triphenylphosphine
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

பாஸ்பீன் (phosphine; PH3) ஒரு நிறமற்ற, எரியக்கூடிய, நச்சு வளிமம் ஆகும். பாஸ்பீனின் ஐயுபிஏசி பெயர் பாஸ்பேன் என்பதாகும். இதன் வேதிவாய்ப்பாடு PH3. தூய பாஸ்பீன் மணமற்று இருக்கும். ஆனால் டைபாஸ்பேன் (P2 H4) கலந்துள்ள தொழில்நுட்ப தரமாதிரி பாஸ்பீன் மிகவும் விரும்பத்தகாத பூண்டு அல்லது அழுகிய மீனின் மணமுடையதாக இருக்கும். பாஸ்பீனில் P2H4 சிறிதளவு கலந்து காணப்படுவதால், இது காற்றில் தன்னிச்சையாகத் தீப்பிடித்து சுடருடன் எரியக்கூடியதாக உள்ளது. பாஸ்பீன்கள் R3P என்ற பொதுவாய்ப்பாடு கொண்ட கரிமபாஸ்பரஸ் தொகுதி சேர்மங்களை உருவாக்குகின்றன. இங்கு R என்பது கரிம வழித்தோன்றல்களைக் குறிக்கும். கரிமபாஸ்பரஸ் சேர்மங்கள் முக்கியமான வினையூக்கிகளாகும்.

வரலாறு[தொகு]

பாஸ்பீன் தனிம பாஸ்பரசுடன் இணக்கமாக சேர்ந்திருந்ததால் இது ஒரு வாயுவாக கருதப்பட்டது. ஆனால் 1789 ஆம் ஆண்டு லவாய்சியே பாஸ்பீனை பாஸ்பரசுடன் இணைந்த ஐதரசன் என்று அடையாளப்படுத்தினார். எனவே பாஸ்பீன் பாஸ்பரசின் ஐதரைடு அல்லது ஐதரடின் பாஸ்பரைடு என்று கருதப்பட்டது.

1845 ஆம் ஆண்டில் தெனார்டு என்பவர் கால்சியம் பாஸ்பைடில் இருந்து உருவாக்கப்பட்ட பாஸ்பீனில் இருந்து டைபாஸ்பேனை பிரிக்க குளிர்விப்புக் குழாயைப் பயன்படுத்தினார். பாஸ்பீன் காற்றில் தன்னிச்சையாகத் தீப்பிடித்து சுடருடன் எரியக்கூடியதாக உள்ளமைக்கும் மேற்பரப்பில் ஆரஞ்சு/பழுப்பு நிறம் உருவாதலுக்கும் காரணமாக இருப்பது P2H4 என்றும், டைபாஸ்பேனை பலபடியாக்கல் வினை மூலமாகப் பெறமுடியும் என்றும் விளக்கினார். மேலும் டைபாஸ்பேனின் வேதிவாய்ப்பாடு PH2 என்றும் இது தனிம பாஸ்பரசு, பாஸ்பீன் மற்றும் உயர்பலபடி இவற்றின் இடைநிலை என்றும் இவர் கருதினார். கால்சியம் பாஸ்பைடிலிருந்து (Ca3P2) ஏனைய பாஸ்பைடுகளை விட அதிகமான P2H4 ஐ உற்பத்தி செய்ய முடிகிறது.

கட்டமைப்பு மற்றும் பண்புகள்[தொகு]

பாஸ்பீன் C3v மூலக்கூறு சமச்சீருடன் கூடிய ஒரு முக்கோணப் பிரமீடு அமைப்பு மூலக்கூறு ஆகும். இதிலுள்ள P-H பிணைப்பின் நீளம் 1.42 Å, H-P-H ன் பிணைப்புக் கோணம் 93.5° மற்றும் இருமுனைவுத்திருப்புதிறன் 0.58 D. இத்திருப்புத்திறன் மீத்தைல் தொகுதி வரிசைச் சேர்மங்களுடன் பதிலீடு செய்யப்படும்போது படிப்படியாக அதிகரிக்கிறது : உதாரணமாக CH3PH2, 1.10 D; (CH3)2PH, 1.23 D; ஆனால் அமைன்கள் பதிலீட்டின் போது இத்திருப்புத்திறன் மாறுபட்டு குறைகிறது. உதாரணம் (CH3)3P, 1.19 D.

பாஸ்பீன் நீரியக் கரைப்பானில் சற்றுக் குறைவாகவே கரையும். ஒரு மில்லி லிட்டர்தண்ணீரில் 0.22 மில்லி பாஸ்பீன் வாயுவே கரைகிறது. ஆனால் தண்ணிரைக் காட்டிலும் மின்முனைவற்ற கரைப்பான்களில் உடனடியாக கரைகிறது. இதற்கு இதில் உள்ள மின்முனைவற்ற P-H பிணைப்புகளே காரணமாகும். தண்ணீரில் கரைந்துள்ள பாஸ்பீன் அமிலத்தன்மையும் இல்லாமல் காரத்தன்மையும் இல்லாமல் செயல்படுகிறது. பாஸ்பீன் ஆக்ஸிசனில் எரிந்து மிக அடர்த்தியான புகையாக மாறி பாஸ்பரஸ் பெண்டாக்சைடை உருவாக்குகிறது.

2 PH3 + 4 O2 → P2O5 + 3 H2O

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Zumdahl, Steven S. (2009). Chemical Principles 6th Ed.. Houghton Mifflin Company. பக். A22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-618-94690-X. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாஸ்பீன்&oldid=2938506" இருந்து மீள்விக்கப்பட்டது