லியுதேத்தியம் பாசுபைடு
| பெயர்கள் | |
|---|---|
| வேறு பெயர்கள்
பாசுபேனைலிடின்லியுத்தேத்தியம் | |
| இனங்காட்டிகள் | |
| 12032-05-2 | |
| EC number | 234-761-7[1] |
InChI
| |
| யேமல் -3D படிமங்கள் | Image |
| பப்கெம் | 82822 |
| |
| பண்புகள் | |
| LuP | |
| வாய்ப்பாட்டு எடை | 205.94[2] |
| தோற்றம் | கருப்பு படிகங்கள் |
| அடர்த்தி | 8,1 |
| கரைசல் | |
| கட்டமைப்பு | |
| படிக அமைப்பு | கனசதுரம் |
வேறுவிதமாகக் கொடுக்கப்பட்டிருந்தாலன்றி
தரவுகள் பொருள்களின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25 °C [77 °F], 100 kPa) கொடுக்கப்பட்டுள்ளன. | |
லியுதேத்தியம் பாசுபைடு (Lutetium phosphide) என்பது LuP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[3][4] லியுத்தேத்தியமும் பாசுபரசும் சேர்ந்து வினைபுரிந்து லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது. கருப்பு நிறப் படிகங்களாக உருவாகும் இது தண்ணீரில் கரையாது.
தயாரிப்பு
[தொகு]லியுத்தேத்தியத்தை சிவப்பு பாசுபரசுடன் சேர்த்து மந்த வாயுச் சூழலில் சூடுபடுத்தினால் லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது.
லியுத்தேத்தியத்தை பாசுபீனுடன் சேர்த்து வினைப்படுத்தினாலும் இச்சேர்மம் உருவாகிறது.
இயற்பியல் பண்புகள்
[தொகு]F m3m என்ற இடக்குழுவில் a = 0.5533 nm, Z = 4 என்ற அலகுக் கூடுகளுடன் கருப்பு நிறத்தில் கனசதுரப் படிகங்களாக லியுத்தேத்தியம் பாசுபைடு உருவாகிறது.[5]
காற்றில் நிலைப்புத்தன்மையுடன் உள்ளது. தண்ணீரில் கரையாது. நைட்ரிக் அமிலத்துடன் தீவிரமாக வினைபுரிகிறது.
பயன்கள்
[தொகு]சீரொளி இருமுனையங்களில், உயர் அலைவரிசை பயன்பாடுகளில், உயர் மின்னளவுகளில் இது குறைக்கடத்தியாகப் பயன்படுகிறது.[6]
கதிர்வீச்சை உறிஞ்சும் திறன் காரணமாக காமா கதிர்வீச்சு கண்டறியும் கருவிகளிலும் இது பயன்படுத்தப்படுகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ EINECS: European Inventory of Existing Commercial Chemical Substances (in ஆங்கிலம்). Office for Official Publications of the European Communities. 1987. p. 591. ISBN 978-92-825-7507-9. Retrieved 12 December 2021.
- ↑ "Landolt-Börnstein Substance / Property Index". lb.chemie.uni-hamburg.de. Retrieved 12 December 2021.
- ↑ Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory. Cumulative Supplement to the Initial Inventory: User Guide and Indices (in ஆங்கிலம்). United States Environmental Protection Agency. Office of Toxic Substances. 1980. p. 176. Retrieved 12 December 2021.
- ↑ "Lutetium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 12 December 2021.
- ↑ Singh, Sanjay Kumar (2019). High Pressure Properties of Lutetium Monopnictides (LuX, X = N, P, As) Theoretical Study at High Pressure : Phase Transition, Electronic and Thermal Properties of LuN, LuP and LuAs Compounds (1. Auflage ed.). Saarbrücken: Scholar's Press. ISBN 9786138913924. Archived from the original on 12 டிசம்பர் 2021. Retrieved 12 December 2021.
{{cite book}}: Check date values in:|archivedate=(help) - ↑ "CAS 12032-05-2 Lutetium Phosphide - Alfa Chemistry". alfa-chemistry.com. Retrieved 12 December 2021.