தாமிர(I) பாசுபைடு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
தாமிர(I) பாசுபைடு
| |
வேறு பெயர்கள்
தாமிர பாசுபைடு, குப்ரசு பாசுபைடு
| |
இனங்காட்டிகள் | |
12019-57-7 | |
ChemSpider | 9725097 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 159399 |
| |
பண்புகள் | |
Cu3P | |
வாய்ப்பாட்டு எடை | 221.6127 கி/மோல் |
தோற்றம் | மஞ்சள் கலந்த சாம்பல் படிகங்கள் |
உருகுநிலை | 900 °C (1,650 °F; 1,170 K) |
-33.0•10−6 செ.மீ3/மோல் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | அறுகோணம், hP24 |
புறவெளித் தொகுதி | P63செ.மீ, No. 185 |
தீங்குகள் | |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
TWA 1 மி.கி/மீ3 (Cu ஆக)[1] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 மி.கி/மீ 3 (Cu ஆக)[1] |
உடனடி அபாயம்
|
TWA 100 மி.கி/மீ3 (Cu ஆக)[1] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாமிர(I) பாசுபைடு (copper(I) phosphide) என்பது Cu3P என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தாமிர பாசுபைடு, குப்ரசு பாசுபைடு, குப்ரோ பாசுபரசு, பாசுபர் தாமிரம் என்ற பெயர்களாலும் இச்சேர்மத்தை அழைக்கின்றனர். தாமிரம் மற்றும் பாசுபரசு தனிமங்கள் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. தாமிரத்தின் பாசுபைடு உப்பு தாமிரம்(I) பாசுபைடு என வகைப்படுத்தப்படுகிறது. மஞ்சள் கலந்த சாம்பல் நிறத்தில் எளிதில் நொறுங்கக் கூடிய படிகக் கட்டமைப்பை இச்சேர்மம் பெற்றுள்ளது. தண்ணீருடன் தாமிரம்(I) பாசுபைடு வினைபுரிவதில்லை. பாசுபர் வெண்கலம் என்ற பெயரில் தாமிரம்(I) பாசுபைடு தாமிர கலப்புலோகங்களில் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தாமிரத்தின் மிகச்சிறந்த ஓர் ஆக்சிசனகற்றியாக இது செயல்படுகிறது.
எதிர் அனல் உலை அல்லது ஓர் மூசை உலையில் தாமிரம்(I) பாசுபைடு உற்பத்தி செய்யப்படுகிறது. உதாரணமாக சிகப்பு பாசுபரசுடன் தாமிரம் மிகுதி பொருள் ஒன்றுடன் சேர்த்து மேற்கண்ட உலையில் இட்டு இது தயாரிக்கப்படுகிறது. குப்ரிக் ஐப்போபாசுப்பைட்டை கதிர்வீச்சுக்கு உட்படுத்தியும் ஒளிவேதியியல் முறையில் இதைத் தயாரிக்கலாம். புறஊதா கதிரைப் பயன்படுத்தி கதிர்வீச்சுக்கு உட்படுத்தும்போது தாமிர பாசுபைடு ஒளிர்வை வெளிப்படுத்துகிறது[2].
வெண் பாசுபரசுடன் தாமிர உப்புக் கரைசலைச் சேர்க்கும்போது கருநீல தாமிர பாசுபைடு படலம் வெண்பாசுபரசின் மீது உருவாகிறது. எனவே, பாசுபரசு துகள்களைக் கொண்டிருக்கும் காயங்கள் 1% தாமிர சல்பேட்டு கரைசலால் கழுவப்படும்போது அத்துகள்கள் எளிதாக நீக்கப்படுகின்றன. அவற்றினுடைய ஒளிர்வு பண்பு இதற்கு உதவுகிறது. பாசுபரசை உட்கொள்வதால் மேற்கொள்ளப்படும் இரைப்பைகழுவலுக்கு தாமிர சல்பேட்டை பயன்படுத்தும்போது தாமிர பாசுபைடு பாதுகாப்பு அடுக்கு உருவாதல் பயன்படுத்திக் கொள்ளப்படுகிறது[3].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0150". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ "Electrophotographic elements and processes. United States Patent 4113484". பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.
- ↑ "Copper Poisoning: Introduction". Archived from the original on 2010-11-26. பார்க்கப்பட்ட நாள் 2009-06-06.