தாமிர பெராக்சைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிர(II) பெராக்சைடு
இனங்காட்டிகள்
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Cu+2].[O-]-[O-]
பண்புகள்
CuO2
வாய்ப்பாட்டு எடை 95.945 கி/மோல்
தோற்றம் அடர் ஆலிவ் பச்சை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிர பெராக்சைடு (Copper peroxide) CuO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படுகிறது. தாமிரத்தினுடைய ஆக்சைடு சேர்மமாகக் கருதப்படும் இத்திண்மம் அடர்த்தியான ஆலிவ் பச்சை நிறத்தில் காணப்படுகிறது. சில வேளைகளில் இதே நிறங்கொண்ட தொங்கல் நிலையிலும் தாமிர பெராக்சைடு இருக்க சாத்தியமுண்டு. நிலைப்புத்தன்மையற்ற உப்பாக இருப்பதால் ஆக்சிசன் மற்றும் பிற தாமிர ஆக்சைடுகளாக சிதைவடைகிறது.

தயாரிப்பு[தொகு]

ஐதரசன் பெராக்சைடு மற்றும் சுக்வெய்சர் வினையாக்கி ஆகியவற்றின் குளிர்ந்த கரைசல்கள் வினையில் ஈடுபடுவதால் தாமிர பெராக்சைடு உருவாகிறது. தாமிர ஐதராக்சைடுடன் நீர்த்த அமோனியா கரைசலைச் சேர்த்து வினைபுரியச் செய்து சுக்வெய்சர் வினையாக்கி தயாரிக்கப்படுகிறது. [1] தாமிர பெராக்சைடு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் சுக்வெய்சர் வினையாக்கியில் மிகையளவு அமோனியா இல்லாமல் கவனிப்பது கண்டிப்பாக அவசியமாகும். ஐதரசன் பெராக்சைடின் பனிக்குளிர் கரைசலுடன் தாமிர ஐதராக்சைடின் தொங்கல் கரைசலை சேர்த்து வினைபுரியச் செய்தும் தாமிர பெராக்சைடை தயாரிக்க முடியும். [2] இவ்வினையும் மிக மெதுவான வேகத்திலேயே நிகழ்கிறது. இறுதியாக எஞ்சும் வினைக் கலவையில் தாமிரம்(II) ஆக்சைடுடன் குளிர்ந்த ஐதரசன் பெராக்சைடு காணப்படுகிறது. [3]

பண்புகள்[தொகு]

ஈரமான தாமிர பெராக்சைடு 6 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைகிறது. [4] ஆனால் உலர் நிலையில் 6 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேலான வெப்பத்தில் நிலைப்புத்தன்மை சற்று அதிகரித்துக் காணப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர_பெராக்சைடு&oldid=3299879" இலிருந்து மீள்விக்கப்பட்டது