உள்ளடக்கத்துக்குச் செல்

தூலியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூலியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
பசுபேனைலிடின்தூலியம்
இனங்காட்டிகள்
12037-68-2
EC number 234-863-1
InChI
  • InChI=1S/P.Tm
    Key: XSKLKLHDOPCDAC-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82857
  • P#[Tm]
பண்புகள்
PTm
வாய்ப்பாட்டு எடை 199.90
அடர்த்தி 7.62 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தூலியம் பாசுபைடு (Thulium phosphide) என்பது TmP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது. [1][2]

தயாரிப்பு

[தொகு]

தூலியத்தையும் பாசுபரசையும் சேர்த்து வினைப்படுத்தினால் தூலியம் பாசுபைடு உருவாகிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

அடர்த்தியான பாசுபைடு படலம் உலோகத்திற்குள் மேலும் வினைகள் நிகழ்வதைத் தடுக்கும். காலியம் ஆர்சனைடை அரித்தெடுத்த பிறகு, TmP/GaAs பல்லின கட்டமைப்பைப் பெற அதன் மேற்பரப்பில் துலியம் பாசுபைடின் ஒருங்குவளர் அடுக்கை வளர்க்கலாம். [3][4] தூலியம் பாசுபைடு கனசதுர திட்டத்தில் Fm3m என்ற இடக்குழுவில் படிகங்களாக உருவாகிறது. [5] இப்படிகத்தின் கட்டமைப்பு சோடியம் குளோரைடின் கட்டமைப்பை ஒத்ததாக உள்ளது.[6]

பயன்கள்

[தொகு]

உயர் ஆற்றல் நிலை, உயர் அலைவரிசை பயன்பாடுகள், சீரொளி மற்றும் இதர ஒளியியல் இருமுனையங்களில் சமாரியம் பாசுபைடு ஒரு குறைக்கடத்தியாகப் பயன்படுத்தப்படுகிறது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Thulium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. Retrieved 22 December 2021.
  2. Toxic Substances Control Act (TSCA) Chemical Substance Inventory (in ஆங்கிலம்). U.S. Government Printing Office. 1979. p. 86. Retrieved 22 December 2021.
  3. Bhajanker, Sanjay; Srivastava, Vipul; Sanyal, Sankar P. (3 June 2013). "Structural and mechanical properties of some thulium pnictides under pressure". AIP Conference Proceedings. pp. 785–786. doi:10.1063/1.4810462. Retrieved 22 December 2021.
  4. Lin, C. H.; Hwu, R. J.; Sadwick, L. P. (1 November 2001). "Investigation of crystal properties of TmP/GaAs and GaAs/TmP/GaAs heterostructures grown by molecular beam epitaxy". Journal of Materials Research (in ஆங்கிலம்). pp. 3266–3273. doi:10.1557/JMR.2001.0450. Retrieved 22 December 2021.
  5. "mp-7171: TmP (cubic, Fm-3m, 225)". materialsproject.org. Retrieved 22 December 2021.
  6. Takafumi, Adachi,; Ichimin, Shirotani,; Osamu, Shimomura, (1999). "Structural phase transitions of rare earth monophosphides with NaCl-type structure under high pressures". Nippon Kessho Gakkai-Shi (in Japanese). Retrieved 22 December 2021.{{cite web}}: CS1 maint: extra punctuation (link) CS1 maint: multiple names: authors list (link) CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்_பாசுபைடு&oldid=4155951" இலிருந்து மீள்விக்கப்பட்டது