தூலியம்(II) அயோடைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தூலியம்(II) அயோடைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தூலியம் ஈரயடோடைடு
இனங்காட்டிகள்
60864-26-8 Y
ChemSpider 4401179
EC number 622-686-6
InChI
  • InChI=1S/2HI.Tm/h2*1H;/q;;+2/p-2
    Key: XGGRJQVPUOEAEU-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5231385
SMILES
  • I[Tm]I
பண்புகள்
I2Tm
வாய்ப்பாட்டு எடை 422.74 g·mol−1
தோற்றம் அடர் பழுப்பு நிற அறுகோணப் படிகங்கள்[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தூலியம்(II) அயோடைடு (Thulium(II) iodide) என்பது TmI2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தூலியமும் அயோடினும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

700~800° செல்சியசு வெப்பநிலையில் ஒரு டான்டலம் கொள்கலனில் தூலியம்(III) அயோடைடு மற்றும் கார உலோகங்களை சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலம் தூலியம்(II) அயோடைடு சேர்மத்தை தயாரிக்கலாம். இலித்தியம் மற்றும் சோடியம் ஆகியவற்றைக் குறைக்கும் முகவர்களாகப் பயன்படுத்தி TmI2 சேர்மம் பெறப்படுகிறது. அதே சமயம் பொட்டாசியம், ரூபிடியம் மற்றும் சீசியம் ஆகியவை பெரோவ்சுகைட்டு கட்டமைப்பு (MTmI3) சேர்மத்தை உருவாக்குகின்றன.[2] CsI சேர்மத்துடன் தூலியம்(II) அயோடைடு 340 °செல்சியசு வெப்பநிலையில் நேரடியாக வினைபுரிந்து உடன் நேரடியாக வினைபுரிந்து CsTmI3 சேர்மம் உருவாகிறது.[3]

தூலியம் மற்றும் பாதரசம்(I) அயோடைடு ஆகியவை சேர்ந்து வினைபுரிவதன் மூலமும் தூலியம் அயோடைடைத் தயாரிக்கலாம். வினை செயல்முறை பின்வருமாறு:

2 Tm + 3 HgI2 → 2 TmI3 + 3 Hg
Tm + HgI2 → TmI2 + Hg
Tm + 2 TmI3 → 3 TmI2

மேற்கோள்கள்[தொகு]

  1. Shihua, Wang; Yaping, Gu; Shengbang, Jiang (1987). "FORMATION MECHANISM OF TmI<SUB>2</SUB> IN Tm-HgI<SUB>2 </SUB>SYSTEM". Acta Physico-Chimica Sinica 3 (03): 334–336. doi:10.3866/pku.whxb19870320. பன்னாட்டுத் தர தொடர் எண்:1000-6818. http://dx.doi.org/10.3866/pku.whxb19870320. 
  2. Schilling, Gaby; Kunert, Christine; Schleid, Thomas; Meyer, Gerd (Dec 1992). "Metallothermische Reduktion der Tribromide und ‐iodide von Thulium und Ytterbium mit Alkalimetallen". Zeitschrift für anorganische und allgemeine Chemie 618 (12): 7–12. doi:10.1002/zaac.19926180102. பன்னாட்டுத் தர தொடர் எண்:0044-2313. http://dx.doi.org/10.1002/zaac.19926180102. 
  3. 罗时敏,王世华.CsTmI3生成机理及其相转变[J].物理化学学报,1990(01):93-96.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தூலியம்(II)_அயோடைடு&oldid=3883808" இலிருந்து மீள்விக்கப்பட்டது