தைட்டானியம்(III) பாசுப்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டானியம்(III) பாசுப்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தைட்டானியம் மோனோபாசுப்பைடு
இனங்காட்டிகள்
12037-65-9 Y
EC number 234-862-6
InChI
  • InChI=1S/P.Ti
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82856
SMILES
  • P#[Ti]
பண்புகள்
TiP
வாய்ப்பாட்டு எடை 78.841 கி/மோல்
தோற்றம் சாம்பல் நிறப் படிகங்கள்
அடர்த்தி 4.08 கி/செ.மீ³, திண்மம் [1]
உருகுநிலை >1400°செல்சியசு [1]
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு பட்டியலிடப்படவில்லை
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

தைட்டானியம்(III) பாசுப்பைடு (Titanium(III) phosphide) என்பது TiP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். தைட்டானியம் மற்றும் பாசுபரசு தனிமங்கள் இணைந்து இச்சேர்மம் உருவாகிறது. பொதுவாக சாம்பல் நிறத்தில் தூளாக இச்சேர்மம் காணப்படுகிறது[1]. உயர் உருகுநிலை கொண்ட உலோகக் கடத்தியாக தைட்டானியம்(III) பாசுப்பைடு கருதப்படுகிறது. [2]. தண்ணீர் மற்றும் அமிலங்களால் இச்சேர்மம் பாதிக்கப்படுவதில்லை [1]. P3− எதிர்மின் அயனியைக் கொண்ட Na3P போன்ற முதல் மற்றும் இரண்டாம் தொகுதி பாசுப்பைடுகள் பொதுவாக உலோகத் தன்மை இல்லாமலும் எளிதில் நீராற்பகுப்பு அடையக்கூடியவையாகவும் இருக்கின்றன. ஆனால் தைட்டானியம்(III) பாசுப்பைடின் இயற்பியல் பண்புகள் இதற்கு மாறாக உள்ளன.தைட்டானியம் பாசுப்பைடை உலோகம் நிறைந்த பாசுப்பைடு என்று வகைப்படுத்துகிறார்கள். இங்கு உலோகத்திலிருந்து பெறப்படும் கூடுதல் இணைதிற எலக்ட்ரான்கள் உள்ளடங்காப் பிணைப்பில் உள்ளன [2].

TiCl4 மற்றும் PH3 சேர்மங்கள் வினைபுரிவதால் தைட்டானியம் பாசுப்பைடு உருவாகிறது [1].

Ti3P [3], Ti2P [4], Ti7P4 [5], Ti5P3 [6], மற்றும் Ti4P3. உள்ளிட்ட பிற தைட்டானியம் பாசுப்பைடு நிலைகளும் அறியப்படுகின்றன [7].

தைட்டானியம் பாசுப்பேட்டு அல்லது தைட்டானியம் ஐசோபுரோப்பாக்சைடு சேர்மங்கள் இரண்டையும் தைட்டானியம்(III) பாசுப்பைடுடன் சேர்த்து குழப்பிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவ்விரண்டையும் சில சமயங்களில் TIP என்ற சுருக்கப் பெயரால் அழைக்கிறார்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 D.L. Perry S.L. Phillips (1995) Handbook of inorganic compounds CRC Press பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8493-8671-3
  2. 2.0 2.1 H.G. Von Schnering, W. Hönle Phosphides - Solid state chemistry Encyclopedia of Inorganic Chemistry Ed. R. Bruce King (1994) John Wiley & Sons பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-93620-0
  3. Hydrogen absorption in Ti3P Halter U., Mrowietz M., Weiss A Journal of the less-common metals 1986 118 343-348
  4. Structure of Ti2P solved by three-dimensional electron diffraction data collected with the precession technique and high-resolution electron microscopy M. Gemmi, X. D. Zou, S. Hovmöller, A. Migliori, M. Vennström and Y. Andersson Acta Crystallogr. (2003). A59, 117-126 எஆசு:10.1107/S0108767302022559 PubMed
  5. New Phases in the Ti-P and Ti-Cu-P Systems, Carrillo C W., Lundström T Acta Chem.Scand., Series A: (1979), 33, 401-402
  6. Crystal Structure Refinement of Ti5P3 Carrillo C W., Lundström T Acta Chemica Scandinavica, Series A: Physical and Inorganic Chemistry 1980 34 415-419
  7. Phase Relationships in the Ti-P System with some Notes on the Crystal Structures of TiP2 and ZrP2, Snell P.O, Acta Chem. Scand. 1968 22 1942-1952