பிசுமத் தைட்டனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிசுமத் தைட்டனேட்டு
Bismuth titanate
Bi12TiO20 crystal.jpg
Bi12TiO20 crystal[1]
Bi12TiO20 structure.png
Bi12TiO20 crystal structure[2]
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிசுமத் தைட்டானியம் ஆக்சைடு, பன்னிருபிசுமத் தைட்டனேட்டு[3]
இனங்காட்டிகள்
12441-73-5 Yes check.svgY
பண்புகள்
Bi12TiO20
வாய்ப்பாட்டு எடை 2875.62
மணம் நெடியற்றது
அடர்த்தி 9.03 கி/செ.மீ3[2]
உருகுநிலை 875 °C (1,607 °F; 1,148 K) Bi4Ti3O12 மற்றும் Bi2O3 ஆக்ச் சிதைவடைகிறது[4]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு பொருள் மையக் கனசதுரம், cI66[4][2]
புறவெளித் தொகுதி I23, No. 197
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references
பிசுமத் தைட்டனேட்டு
Bismuth titanate
Bi4Ti3O12 structure.png
Bi4Ti3O12படிக அமைப்பு[5]
பெயர்கள்
வேறு பெயர்கள்
பிசுமத் தைட்டானியம் ஆக்சைடு
இனங்காட்டிகள்
12010-77-4 Yes check.svgY
ChemSpider 10637934 Yes check.svgY
EC number 234-564-6
பண்புகள்
Bi4Ti3O12
வாய்ப்பாட்டு எடை 1171.5
மணம் நெடியற்றது
அடர்த்தி 7.95 கி/செ,மீ3[5]
கரையாது
கட்டமைப்பு
படிக அமைப்பு சாய்சதுரம், oS76[5]
புறவெளித் தொகுதி Aba2, No. 41
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

பிசுமத் தைட்டனேட்டு (Bismuth titanate) என்பது பிசுமத், தைட்டானியம், ஆக்சிசன் ஆகிய தனிமங்கள் இணைந்து உருவாகும் கனிம வேதியியல் சேர்மமாகும். பிசுமத் தைட்டானியம் ஆக்சைடு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. திண்ம நிலையிலுள்ள இச்சேர்மத்தின் வேதியியல் வாய்ப்பாடு Bi12TiO20 அல்லது Bi4Ti3O12 ஆகும்.

தயாரிப்பு[தொகு]

பிசுமத் மற்றும் தைட்டானியம் ஆக்சைடுகளின் கலவையை சூடுபடுத்தும் போது பிசுமத் தைட்டனேட்டு பீங்கான் உருவாகிறது. 730-850° செல்சியசு வெப்பநிலையில் Bi12TiO20 உருவாகிறது. வெப்பநிலை 875° செல்சியசு வெப்பநிலைக்கு உயரும்போது இது சிதைவடைந்து Bi4Ti3O12 மற்றும் Bi2O3 ஆகியன உருவாகின்றன [4]. Bi12TiO20 சேர்மத்தின் மில்லிமீட்டர் அளவுள்ள படிகங்களை 880–900 ° செல்சியசு வெப்பநிலையில் சொக்ரால்சுகி செயல்முறையில் உருவாக்க முடியும் [1].

பண்பும் பயன்களும்[தொகு]

ஒளிவிலகல் விளைவு, மின்னொளியியல் விளைவு ஆகிய பண்புகளை பிசுமத் தைட்டனேட்டு வெளிப்படுத்துகிறது. அதாவது, மின்புலம் அல்லது மின்னொளியில் ஒளிவிலகல் எண்ணில் திரும்புத்திற மாற்றம் நிகழும்போது இப்பண்புகள் முறையே வெளியிடப்படுகின்றன. இதன் விளைவாக மீள் பதிவு ஊடகங்களில் நிகழ்நேர ஒளிப்படவியல் அல்லது படத்தைச் செயலாக்கும் பயன்பாடுகளில் பயன்படுத்துவதற்கு சாத்தியங்கள் உள்ளவையாகின்றது [4][1].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Shen, Chuanying; Zhang, Huaijin; Zhang, Yuanyuan; Xu, Honghao; Yu, Haohai; Wang, Jiyang; Zhang, Shujun (2014). "Orientation and Temperature Dependence of Piezoelectric Properties for Sillenite-Type Bi12TiO20 and Bi12SiO20 Single Crystals". Crystals 4 (2): 141. doi:10.3390/cryst4020141. 
  2. 2.0 2.1 2.2 Efendiev, Sh. M.; Kulieva, T. Z.; Lomonov, V. A.; Chiragov, M. I.; Grandolfo, M.; Vecchia, P. (1982). "Crystal Structure of Bismuth Titanium Oxide Bi12TiO20". Physica status solidi (a) 74: K17. doi:10.1002/pssa.2210740148. 
  3. Yaws, Carl L. (2015). The Yaws Handbook of Physical Properties for Hydrocarbons and Chemicals: Physical Properties for More Than 54,000 Organic and Inorganic Chemical Compounds, Coverage for C1 to C100 Organics and Ac to Zr Inorganics. Elsevier Science. பக். 698. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-12-801146-1. https://books.google.com/books?id=GutDBAAAQBAJ&pg=PA698. 
  4. 4.0 4.1 4.2 4.3 Santos, D. J.; Barbosa, L. B.; Silva, R. S.; MacEdo, Z. S. (2013). "Fabrication and Electrical Characterization of Translucent Bi12TiO20 Ceramics". Advances in Condensed Matter Physics 2013: 1. doi:10.1155/2013/536754. 
  5. 5.0 5.1 5.2 Van Uitert, L. G.; Egerton, L. (1961). "Bismuth Titanate. A Ferroelectric". Journal of Applied Physics 32 (5): 959. doi:10.1063/1.1736142. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிசுமத்_தைட்டனேட்டு&oldid=2479428" இருந்து மீள்விக்கப்பட்டது