தைட்டனோசென் பெண்டாசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தைட்டனோசென் பெண்டாசல்பைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தைட்டனோசென் பெண்டாசல்பைடு
இனங்காட்டிகள்
12116-82-4 Y
பண்புகள்
C10H10S5Ti
வாய்ப்பாட்டு எடை 338.382
தோற்றம் சிவப்பு திண்மம்
கட்டமைப்பு
ஒருங்கிணைவு
வடிவியல்
உருக்குலைந்த நான்முகி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

தைட்டனோசென் பெண்டாசல்பைடு (Titanocene pentasulfide) என்பது (C5H5)2TiS5, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமதைட்டானியம் சேர்மமாகும். பொதுவாக இச்சேர்மத்தை Cp2TiS5 என்ற சுருக்கக் குறியீட்டால் குறிப்பிடுவார்கள். இந்த மெட்டலோசென் வகைச் சேர்மம் அடர்த்தியான சிவப்பு நிறத் திண்மமாகக் காணப்படுகிறது. கரிம கரைப்பான்களில் கரைகிறது. தனிமநிலை கந்தகத்தின் அரிய புறவேற்றுமை வடிவங்கள் சிலவற்றையும் அவற்றுடன் தொடர்புடைய கனிம வளையச் சேர்மங்களையும் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாக இது பயன்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

தைட்டனோசென் டைகுளோரைடுடன் பல்சல்பைடு உப்புகளைச் சேர்த்து சூடுபடுத்துவதன் மூலம் தைட்டனோசென் பெண்டாசல்பைடைத் தயாரிக்கலாம்:[1]. முதன்முதலில் தனிமநிலை கந்தகத்தை தைட்டனோசென் டைகார்பனைலுடன் சேர்த்து இச்சேர்மம் தயாரிக்கப்பட்டது:[2]

(C5H5)2Ti(CO)2 + 58 S8 → (C5H5)2TiS5 + 2 CO.

இச்சேர்மம் Ti(IV) இன் ஒரு போலிநான்முகி அணைவுச் சேர்மமாகப் பார்க்கப்படுகிறது. Ti–S இடைவெளிகள் 2.420 மற்றும் 2.446 Å ஆகவும் S–S பிணைப்பு தூரம் சாராசரி வீச்சான 2.051–2.059 Å.ஆகவும் உள்ளன[3]. மாறும் அணுக்கரு காந்த உடனிசைவு வண்ணக்கற்றையை இம்மூலக்கூறு வெளிப்படுத்துகிறது [4].

வினைகள்[தொகு]

கந்தகம் மற்றும் செலீனியம் குளோரைடுகளுடன் Cp2TiS5 வினைபுரிகிறது. தைட்டனோசென் டைகுளோரைடும், பல்வேறு S5+x மற்றும் S5Sex வளையங்களும் தோன்றுகின்றன. டைசல்பர் டைகுளோரைடிலிருந்து S7 தயாரித்தல் இங்கு தரப்பட்டுள்ளது. :[5]

(C5H5)2TiS5 + S2Cl2 → (C5H5)2TiCl2 + S7:

மேலும் இது ஆல்கீன்கள், கீட்டோன்கள் ஆகியவற்றுடனும் வினைபுரிகிறது. Ti, C மற்றும் S தனிமங்களால் உருவாக்கப்பட்ட பல்லினவளையங்கள் தோன்றுகின்றன. டிரை அல்கைல்பாசுபீன்களுடன் இது வினைபுரிந்து பல்வேறு அளவு வளையங்களில் இருபடிச் சேர்மமாக உருவாகிறது [6].

தைட்டனோசென் பெண்டாசல்பைடின் தேர்ந்தெடுக்கப்பட்ட சில வினைகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. Shaver, Alan; Mccall, James M.; Marmolejo, Gabriela (1990). "Cyclometallapolysulfanes (and Selanes) of Bis(η5-Cyclopentadienyl) Titanium(IV), Zirconium(IV), Molybdenum(IV), and Tungsten(IV)". Inorg.Synth. 27: 59–65. doi:10.1002/9780470132586.ch11. 
  2. "π-Complexes of Group IVA metals with cyclopentadiene, indene, and fluorine". Bull. Soc. Chim. France 11: 3548–64. 1966. 
  3. Epstein, E. F.; Bernal, I. (1970). "Pentachalcogenide dianions in transition-metal complexes: crystal structure of bis-(π-cyclopentadienyl)titanium pentasulphide". J. Chem. Soc. D 1970: 410–411. doi:10.1039/C29700000410. https://archive.org/details/sim_journal-of-the-chemical-society_1970_b_2/page/n215. 
  4. Shaver, Alan; McCall, James M. (1984). "Preparation and Variable-Temperature NMR Studies of the Metallacyclosulfanes Cp2MS5 and (MeSCp)MS3, Where M = Ti, Zr, and Hf". Organometallics 3: 1823–1829. doi:10.1021/om00090a008. 
  5. Steudel, Ralf; Eckert, Bodo (2003). "Solid Sulfur Allotropes Sulfur Allotropes". Topics in Current Chemistry 230: 1–80. doi:10.1007/b12110. 
  6. Cotton, F. Albert; Wilkinson, Geoffrey; Murillo, Carlos A.; Bochmann, Manfred (1999). Advanced Inorganic Chemistry (6th ed.). Wiley. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0471199571.