சிர்கோனோலைட்டு
தோற்றம்
| சிர்க்கோனோலைட்டு Zirconolite | |
|---|---|
| பொதுவானாவை | |
| வகை | ஆக்சைடு கனிமம் |
| வேதி வாய்பாடு | CaZrTi2O7 |
| இனங்காணல் | |
| நிறம் | கருப்பு முதல் பழுப்பு, சிவப்பு |
| படிக அமைப்பு | 2M பல்வகை:ஒற்றைச்சாய்வு 3O பல்வகை: நேர்ச்சாய்சதுரம் 3T பல்வகை: முக்கோணம் |
| மிளிர்வு | பிசின் தன்மை , துணை உலோகம் |
| கீற்றுவண்ணம் | அடர் பழுப்பு, மஞ்சள் பழுப்பு |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளிபுகாது அல்லது கசியும் |
| மேற்கோள்கள் | [1] |
சிர்கோனோலைட்டு (Zirconolite) என்பது CaZrTi2O7 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமமாகும் கால்சியம் சிர்கோனியம் தைட்டனேட்டு கனிமம் என்று இது வகைப்படுத்தப்படுகிறது. கனிமத்தின் சில மாதிரிகளில் தோரியம், யுரேனியம், சீரியம், நையோபியம் மற்றும் இரும்பு போன்ற தனிமங்களும் கலந்திருக்க சாத்தியம் உள்ளது. தோரியம் அல்லது யுரேனியம் இருப்பதால் இக்கனிமம் கதிரியக்கத் தன்மையைப் பெறுகிறது. பெரும்பாலும் கருப்பு அல்லது பழுப்பு நிறத்தில் காணப்படுகிறது.[2]