துத்தநாக தைட்டனேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
துத்தநாக தைட்டானியம் ஆக்சைடு
| |
இனங்காட்டிகள் | |
12036-69-0 ![]() | |
பண்புகள் | |
ZnTiO3 | |
வாய்ப்பாட்டு எடை | 161.24 கி/மோல் |
தோற்றம் | வெண்ணிறப் பொடி |
கரையாது | |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | தீங்கானது (Xn) |
R-சொற்றொடர்கள் | R20 |
S-சொற்றொடர்கள் | S9, S36 |
தீப்பற்றும் வெப்பநிலை | None |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
துத்தநாக தைட்டனேட்டு (Zinc titanate) என்பது ZnTiO3 , Zn2TiO4, மற்றும் Zn2Ti3O8 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுகளுடன் மூன்று வெவ்வேறு வடிவங்களில் காணப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். துத்தந்நாக தைட்டானியம் ஆக்சைடு என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் ZnTiO3 (ZnO-TiO2), Zn2TiO4 (2ZnO-TiO2) மற்றும் Zn2Ti3O8 (2ZnO-3TiO2) என்ற கட்டமைப்புகளைப் பெற்றுள்ளது. மீட்டாக்கம் செய்யக்கூடிய வினையூக்கியாக, ஒரு நிறமியாக மற்றும் உயர் வெப்பநிலைகளில் [1] கந்தகப் பொருட்களை கவரும் கவர்பொருளாக துத்தநாக தைட்டனேட்டு பயன்படுத்தப்படுகிறது. வெண்மை நிறப் பொடியாகக் காணப்படும் இச்சேர்மம் நீரில் கரைவதில்லை.
தயாரிப்பு மற்றும் பண்புகள்
[தொகு]ZnTiO3, Zn2TiO4 மற்றும் Zn2Ti3O8 முதலியன முறையே அறுகோணம், கனசதுரம் (தலைகீழ் சிபினல்) மற்றும் கனசதுரக் கட்டமைப்புகளில படிகமாகின்றன. ZnO மற்றும் TiO2 தூள்களைக் கலந்து கலவையை சூடாக்குவதால் அல்லது கோளக அரைவை இயந்திரத்தில் இட்டு பதப்படுத்துவதாலும் துத்தநாக தைட்டனேட்டு தயாரிக்கப்படுகிறது. குறைவான வெப்பநிலைகளில் Zn2Ti3O8 சேர்மமும் தொடர்ந்து ZnTiO3, கடைசியாக Zn2TiO4 உருவாகிறது[1]. கடைசி கட்டத்தில் வினையின் வெப்பநிலை 1000 பாகை செல்சியசு வெப்பநிலையை [2] எட்டுகிறது.
நச்சுத்தன்மை
[தொகு]தோல், சளிச்சவ்வு, கண்களில் துத்தநாக தைட்டனேட்டு எரிச்சலை உண்டுபண்ணுகிறது. துத்தநாகப் பொடியால் உலோகப் புகை காய்ச்சல் ஏற்படுத்த முடியும். [3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Klaus D. Sattler (1 May 2010). Nanotubes and Nanowires. CRC Press. pp. 13–. ISBN 978-1-4200-7542-7. Retrieved 10 March 2012.
- ↑ Aysel T. Atimtay; Douglas P. Harrison (1998). Desulfurization of hot coal gas. Springer. pp. 300–. ISBN 978-3-540-64726-3. Retrieved 10 March 2012.
- ↑ Material Safety Data Sheet. alfa.com