காலியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
காலியம் பாசுபைடு
Sphalerite-unit-cell-3D-balls.png
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
காலனைலிடின்பாசுபேன்
இனங்காட்டிகள்
12063-98-8 Yes check.svgY
ChemSpider 74803 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82901
வே.ந.வி.ப எண் LW9675000
பண்புகள்
GaP
வாய்ப்பாட்டு எடை 100.697 கி/மோல்
தோற்றம் வெளிர் ஆரஞ்சு திண்மம்
மணம் நெடியற்றது
அடர்த்தி 4.138 கி/செ.மீ3
உருகுநிலை
கரையாது
Band gap 2.26 எலக்ட்ரான் வோல்ட் (300 கெல்வின்)
எதிர்மின்னி நகாமை 250 செ.மீ2/(V*s) (300 K)
வெப்பக் கடத்துத்திறன் 1.1 W/(cm*K) (300 K)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 3.02 (2.48 மைக்ரோமீட்டர்), 3.19 (840 நா.மீ), 3.45 (550 நா.மீ), 4.30 (262 நா.மீ)
கட்டமைப்பு
படிக அமைப்பு துத்தநாக சல்பைடு
புறவெளித் தொகுதி T2d-F-43m
Lattice constant a = 545.05 பை.மீ
ஒருங்கிணைவு
வடிவியல்
நான்முகம்
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 110 °C (230 °F; 383 K)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் காலியம் நைட்ரைடு
காலியம் ஆர்சினைடு
காலியம் ஆண்டிமோனைடு
ஏனைய நேர் மின்அயனிகள் அலுமினியம் பாசுபைடு
இண்டியம் பாசுபைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

காலியம் பாசுபைடு (Gallium phosphide) என்பது GaP என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். குறைக்கடத்தி வேதிப்பொருளான இச்சேர்மம் 2.26 எலக்ட்ரான் வோல்ட் (300 கெல்வின்) மறைமுக ஆற்றல் இடைவெளி அளவைக் கொண்டுள்ளது. வெளிர் ஆரஞ்சு நிறத் துண்டுகளாக இப்பல்படிகம் தோற்றமளிக்கிறது. கட்டற்ற கடத்தி ஈர்ப்பு காரணமாக, மாசற்ற ஒற்றைப் படிகச்சீவல்கள் தெளிவான ஆரஞ்சு நிறத்தில் உள்ளன. காலியம் பாசுபைடு தண்ணீரில் கரையக்கூடியதாகவும் நெடியற்றும் காணப்படுகிறது. கந்தகம் அல்லது தெலூரியம் காலியம் பாசுபைடுடன் மாசிடப்பட்டு என் – வகை குறைக்கடத்திகள் உருவாக்கப்படுகின்றன, துத்தநாகம் காலியம் பாசுபைடுடன் மாசிடப்பட்டு பி - வகை குறைகடத்திகள் உருவாக்கப்படுகின்றன. ஒளியலில் காலியம் பாசுபைடு சில பயன்களைக் கொண்டுள்ளது. 262 நா.மீ – இல் 4.30 (புற ஊதா), 550 நா.மீ – இல் 3.45 (பச்சை) மற்றும் 840 நா.மீ – இல் 3,19 (அகச்சிவப்பு) என ஒளிவிலகல் எண் அளவுகளை காலியம் பாசுபைடு பெற்றுள்ளது[1]

ஒளி உமிழ் இருமுனையங்கள்[தொகு]

ஆங்கிலத்தில் சுருக்கமாக எல்.இ.டி எனப்படும் இரு முனையங்களை பெருமளவில் தயாரிப்பதற்கு காலியம் பாசுபைடு பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பச்சை நிற குறைந்த மற்றும் நடுத்தர பிரகாசமான இருமுனையங்கள் 1960 களிலிருந்து குறைந்த விலையில் தயாரிக்கப்படுகின்றன. உயர் மின்சார அளவுகளில் இதன் ஆயுள் குறைவாகும். மேலும், வெப்பநிலை மாறுபாடுகளும் இதன் ஆயுளைப் பாதிக்க்கும். காலியம் பாசுபைடை தனியாகவும் காலியம் ஆர்சினைடு பாசுபைடுடன் இணைத்தும் பயன்படுத்துகிறார்கள்.

தூய்மையான காலியம் பாசுபைடு ஒளி உமிழ் இருமுனையங்கள் 555 நானோமீட்டர் அலைநீள பச்சை ஒளியை உமிழ்கின்றன. நைட்ரசன் மாசிட்ட காலியம் பாசுபைடு ஒளி உமிழ் இருமுனையங்கள் 565 நானோமீட்டர் அலைநீள மஞ்சள் – பச்சை ஒளியையும், துத்தநாக ஆக்சைடு மாசிட்ட காலியம் பாசுபைடு ஒளி உமிழ் இருமுனையங்கள் 700 நானோமீட்டர் அலைநீள சிவப்பு ஒளியையும் உமிழ்கின்றன.

மஞ்சள் மற்றும் சிவப்பு ஒளிகள் காலியம் பாசுபைடில் ஒளி ஊடுறுவும் என்பதால் GaP -மேல்-GaAsPGaP ஒளி உமிழ் இருமுனையங்கள், GaAs-மேல்-GaAsP ஒளி உமிழ் இருமுனையங்களைவிட மேம்பட்டவையாக உள்ளன.

900 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு மேல் காலியம் பாசுபைடு பிரிகையடைந்து, பாசுபரசு ஆவியாக வெளியேறுகிறது. 1500 பாகை செல்சியசு படிகவளர்ச்சியில், 10-100 வளிமண்டல மந்த வாயு அழுத்தத்தில் பாசுபரசை உருகிய போரிக் ஆக்சைடு போர்வைக்குள் வைப்பதன் மூலம் பிரிகையடைதல் தடுக்கப்படுகிறது. இச்செயல்முறை நீர்ம அகவுறையுடனான சொக்ரால்சுகி வளர்ச்சிமுறை எனப்படுகிறது. இது சிலிக்கன் சீவல்களுக்கு பயன்படுத்தப்படும் சொக்ரால்சுகி செயல்முறையின் விரிவுபடுத்தப்பட்ட ஒரு முறையாகும்.

தொடர்புடைய வேதிப்பொருட்கள்[தொகு]

தொடர்புடைய உலோகக் கலவைகள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காலியம்_பாசுபைடு&oldid=3361990" இருந்து மீள்விக்கப்பட்டது