தாமிர ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாமிர ஆக்சலேட்டு
பெயர்கள்
வேறு பெயர்கள்
தாமிரம்(II) ஆக்சலேட்டு, குப்ரிக் ஆக்சலேட்டு, தாமிரம்(2+) ஈத்தேன் டையோயேட்டு
இனங்காட்டிகள்
814-91-5 Y
55671-32-4
ChemSpider 12596
EC number 212-411-4
InChI
  • InChI=1S/C2H2O4.Cu/c3-1(4)2(5)6;/h(H,3,4)(H,5,6);/q;+2
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 54602330
SMILES
  • C(=O)(C(=O)O)O.[Cu+2]
UNII BN136S94FS N
UN number 3077
பண்புகள்
CuC
2
O
4
வாய்ப்பாட்டு எடை 153.58
தோற்றம் நீல-வெண்மை திண்மம் (ஓர் அரை நீரேற்றாக)
உருகுநிலை 310 °C (590 °F; 583 K)
insoluble
4.43×10−10[1]
தீங்குகள்
GHS pictograms The exclamation-mark pictogram in the Globally Harmonized System of Classification and Labelling of Chemicals (GHS)[2]
GHS signal word எச்சரிக்கை
<abbr class="abbr" title="தீங்கு விளைவிக்கும் அறிக்கைகளில் வழு">H302+312, H302, H312
P264, P270, P280, P301+312, P302+352, P312, P322, P330, P363, P501
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

தாமிர ஆக்சலேட்டு (Copper oxalate) CuC2O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும்.[3] தாமிரமும் ஆக்சாலிக் அமிலமும் சேர்ந்து இந்த உப்பு உருவாகிறது. நடைமுறையில் தாமிர ஆக்சலேட்டு நீர், ஆல்ககால், ஈதர் மற்றும் அசிட்டிக் அமிலத்தில் கரையாது. ஆனால் அம்மோனியம் ஐதராக்சைடில் கரையும். தாமிர ஆக்சலேட்டு ஒரு நீரேற்றாக உருவாகிறது. அமில-நீல படிகங்களை இது உருவாக்குகிறது.[4]

தயாரிப்பு[தொகு]

தாமிரம்(II) உப்புடன் சோடியம் ஆக்சலேட்டு கரைசலை சேர்த்து வீழ்படிவாக்கல் வினை மூலம் தாமிர ஆக்சலேட்டை தயாரிக்கலாம். அல்லது ஆக்சாலிக் அமிலத்துடன் தாமிர சல்பேட்டை சேர்த்து வினைபுரியச் செய்தும் தாமிர ஆக்சலேட்டை உருவாக்கலாம்.[5]

பண்புகள்[தொகு]

ஓர் அரைநீரேற்றாக தாமிர ஆக்சலேட்டு என்பது ஒரு நீல-வெள்ளை திண்மமாகும். இது நடைமுறையில் தண்ணீரில் கரையாதது. 200 பாகை செல்சியசு வெப்பநிலையில், படிகமயமாக்கல் காரணமாக இது தண்ணீரை இழக்கிறது. தாமிர ஆக்சலேட்டு கார உலோக ஆக்சலேட்டுகள் மற்றும் அம்மோனியம் ஆக்சலேட்டுடன் சேர்ந்து அணைவுச் சேர்மங்களை உருவாக்குகிறது:

பயன்கள்[தொகு]

தாமிர ஆக்சலேட்டு கரிம வினைகளுக்கு ஒரு வினையூக்கியாகப் பயன்படுகிறது. அசிட்டைலேற்றம் பெற்ற அசிட்டாலை நிலைநிறுத்தவும் இது பயன்படுகிறது.[6]

இதையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. John Rumble (June 18, 2018) (in English). CRC Handbook of Chemistry and Physics (99 ). CRC Press. பக். 5–188. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1138561632. https://archive.org/details/crchandbookofche0000unse_l3v2. 
  2. "Copper oxalate - Substance Information - ECHA". European Chemical Agency. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
  3. Royappa, A. Timothy; Royappa, Andrew D.; Moral, Raphael F.; Rheingold, Arnold L.; Papoular, Robert J.; Blum, Deke M.; Duong, Tien Q.; Stepherson, Jacob R. et al. (November 2016). "Copper(I) oxalate complexes: Synthesis, structures and surprises". Polyhedron 119: 563–574. doi:10.1016/j.poly.2016.09.043. 
  4. "Hazardous Substances Data Bank (HSDB) : 265" (in ஆங்கிலம்). National Library of Medicine. பார்க்கப்பட்ட நாள் 17 June 2021.
  5. Gooch, Frank Austin (1909). The precipitation of copper oxalate in analysis. பக். 448. இணையக் கணினி நூலக மையம்:890741677. 
  6. Richardson, H. Wayne (1997). Handbook of Copper Compounds and Applications. CRC Press. பக். 84. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8247-8998-5. https://books.google.com/books?id=Zk0z22smWUoC&pg=PA84. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாமிர_ஆக்சலேட்டு&oldid=3849108" இலிருந்து மீள்விக்கப்பட்டது