தாமிரம்(II) சிடீயரேட்டு
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
தாமிரம்(2+) டையாக்டாடெக்கோனேட்டு, குப்ரிக் சிடீயரேட்டு, தாமிரம் டைசிடீயரேட்டு[1]
| |
இனங்காட்டிகள் | |
660-60-6 | |
ChemSpider | 84453 |
EC number | 211-540-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 93553 |
| |
UNII | Z3VAO22R1R |
பண்புகள் | |
Cu(C17H35COO)2 | |
வாய்ப்பாட்டு எடை | 630.48 |
தோற்றம் | நீலப் பச்சை படிக உருவமற்ற பொருள் |
அடர்த்தி | 1.10 கி/செ.மீ3 |
கொதிநிலை | 250 °C (482 °F; 523 K) |
கரையாது | |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | எச்சரிக்கை |
H315, H319, H335 | |
P261, P280, P305, P351, P338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தாமிரம்(II) சிடீயரேட்டு (Copper(II) stearate) Cu(C17H35COO)2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஓர் உலோகக் கரிமச் சேர்மமாகும்.[2][3] தாமிரமும் சிடீயரிக் அமிலமும் வினை புரிவதால் இந்த உப்பு உருவாகிறது. இச்சேர்மம் ஓர் உலோக சோப்பாக அதாவது கொழுப்பு அமிலத்தின் உலோக வழிப்பெறுதியாக வகைப்படுத்தப்படுகிறது.
தயாரிப்பு
[தொகு]சோடியம் சிடீயரேட்டும் தாமிர சல்பேட்டும் பரிமாற்ற வினையில் ஈடுபடுவதால் தாமிரம்(II) சிடீயரேட்டு உருவாகிறது.:[4][5]
இயற்பியல் பண்புகள்
[தொகு]தாமிரம்(II) சிடீயரேட்டு ஒரு நீல-பச்சை நிறத்திலான படிக உருவமற்ற வேதிப் பொருளை உருவாக்குகிறது.[6] தோற்றம் மற்றும் தொடுதல் ஆகிய இரண்டு பண்புகளிலும் பிளாசுட்டிசின் உப்பைப் போன்றதாகும்.
தண்ணீர், எத்தனால், மெத்தனால் போன்ற கரைப்பான்களில் இது கரையாது.
ஈதர், பிரிடின், சூடான பென்சீன் மற்றும் குளோரோஃபார்ம் போன்ற கரிமக் கரைப்பான்களில் இது கரைகிறது.
வேதிப் பண்புகள்
[தொகு]இயல்பான நிலைகளில் இச்சேர்மம் நிலைப்புத்தன்மை கொண்டதாகவும் வினைத்திறன் அற்றும் காணப்படுகிறது.[7]
பற்றவைக்க முயற்சிக்கும்போது, தாமிர சிடீயரேட்டு முதலில் உருகி, பின்னர் கீழ்பகுதியில் பச்சை நிறச் சுடருடன் எரியத் தொடங்குகிறது. பின்னர் குப்ரிக் ஆக்சைடு உருவாவதால் இது விரைவாக கருப்பு நிறமாக மாறும்:
பயன்கள்
[தொகு]- பொருள்கள் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் சாயங்கள், மேற்பூச்சுகள் தயாரிப்பில் பயன்படுகிறது.
- வெண்கலச் சிற்பங்களை வார்ப்பதில் ஒரு அங்கமாகவும் பயன்படுத்தப்படுகிறது.[8]
- ஐதரோபெராக்சைடுகளை சிதைக்கும் வினைகளில் வினையூக்கியாகப் பயன்படுகிறது.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "CAS 660-60-6 Copper(ii)stearate - Alfa Chemistry". alfa-chemistry.com. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "Copper(II) stearate". Oakwood Chemical. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "Copper(II) Stearate" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ Richardson, H. Wayne (16 January 1997). Handbook of Copper Compounds and Applications (in ஆங்கிலம்). CRC Press. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-8247-8998-5. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "Cupric stearate | 660-60-6" (in ஆங்கிலம்). ChemicalBook. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "MatWeb - The Online Materials Information Resource". matweb.com. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "SAFETY DATA SHEET" (PDF). chemservice.com. பார்க்கப்பட்ட நாள் 14 February 2023.
- ↑ Scott, David A. (2002). Copper and Bronze in Art: Corrosion, Colorants, Conservation (in ஆங்கிலம்). Getty Publications. p. 293. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-89236-638-5. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ Ugo, R. (6 December 2012). Aspects of Homogeneous Catalysis: A Series of Advances (in ஆங்கிலம்). Springer Science & Business Media. p. 85. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-94-010-1199-0. பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.