செப்பு(I) புரோமைடு
![]() | |
![]() | |
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
குப்ரசு புரோமைடு
| |
இனங்காட்டிகள் | |
7787-70-4 ![]() | |
ChemSpider | 22995 ![]() |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24593 |
SMILES
| |
பண்புகள் | |
CuBr | |
வாய்ப்பாட்டு எடை | 143.45 கி/மோல் |
தோற்றம் | பச்சைத் தூள் |
அடர்த்தி | 4.71 கி/செமீ3, திடம் |
உருகுநிலை | 492 °C (918 °F; 765 K) |
கொதிநிலை | 1,345 °C (2,453 °F; 1,618 K) |
மெலிதாகக் கரையக்கூடியது | |
கரைதிறன் | HCl, HBr, அமோனியம் ஐதரொக்சைடு இல் எளிதில் கரையக் கூடியது அசிட்டோன், சல்பூரிக் அமிலம் இல் மெலிதாகக் கரையும். |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 2.116 |
இருமுனைத் திருப்புமை (Dipole moment) | 1.46 D |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | Non-flammable |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | செப்பு(I) குளோரைடு செப்பு(I) அயோடைடு |
ஏனைய நேர் மின்அயனிகள் | வெள்ளி(I) புரோமைடு செப்பு(II) புரோமைடு Mercury(I) bromide |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
![]() ![]() ![]() | |
Infobox references | |
செப்பு(I) புரோமைடு (Copper(I) bromide) என்ற கனிமச் சேர்மத்தின் மூலக்கூறு வாய்ப்பாடு CuBr ஆகும். இது குப்ரசு புரோமைடு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த எதிர்காந்தத் திடப்பொருள் துத்தநாக சல்பைடு சேர்மத்தினைப் போல பல்பகுதிக் கட்டமைப்பைக் கொண்டுள்ளது. இச்சேர்மம் பரவலாக தொகுப்பு முறையில் கரிமச் சேர்மங்களைத் தயாரிக்கப் பயன்படுகிறது.
தயாரிப்பு, அடிப்படைப் பண்புகள், அமைப்பு[தொகு]
தூய்மையான திடப்பொருளாக உள்ளபோது இச்சேர்மம் நிறமற்று உள்ளது. இருந்தபோதிலும் இதனுடைய மாதிரி உப்புகள் பெரும்பாலும் குப்ரிக் அசுத்தங்கள் கலந்திருக்கும் காரணத்தால் நிறம் பெற்றே காணப்படுகின்றன. ( படம் பார்க்கவும் )[1]. தாமிரம் அயனியும் காற்றில் எளிதாக ஆக்சிசனேற்றம் அடைகிறது. குப்ரிக் உப்புகளை புரோமைடு முன்னிலையில் சல்பைட்டுடன் சேர்த்து ஆக்சிசன் குறைப்பு வினைக்கு உட்படுத்துவதன் மூலமாக தாமிர(1) புரோமைடு பெரும்பாலும் தயாரிக்கப்படுகிறது[2]. உதாரணமாக குப்ரிக் புரோமைடை சல்பைட்டுடன் சேர்த்து ஆக்சிசன் குறைப்பு வினைக்கு உட்படுத்தினால் குப்ரசு புரோமைடும் ஐதரசன் புரோமைடும் உருவாகின்றன.
- 2 CuBr2 + H2O + SO32− → 2 CuBr + SO42− + 2 HBr
பல்பகுதி கட்டமைப்பின் காரணமாக இது பெரும்பாலான கரைப்பான்களில் கரைவதில்லை. நான்கு ஒருங்கிணைக்கப்பட்ட தாமிர அணு மையங்கள் புரோமைடு ஈந்தணைவிகளால் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள தனிச்சிறப்பைக் கொண்டுள்ளது. (ZnS அமைப்பு) லூயிசு காரத்துடன் சேர்க்கும் போது தாமிர புரோமைடு மூலக்கூறு கூட்டுப்பொருளாக மாற்றமடைகிறது. உதாரணமாக இருமெத்தில் சல்பைடுடன் சேர்ந்து நிறமற்ற கலவையாக உருவாகிறது:[3]
- CuBr + S(CH3)2 → CuBr(S(CH3)2) .
இந்த ஒருங்கிணைந்த சகப்பிணைப்புக் கலவையில் தாமிரம் இரண்டு ஒருங்கிணைப்புகளாய் நேர்கோட்டு வடிவிலும் பிற ஒருங்கிணைப்புகளுக்கு ஈந்தனைவிகளும் வாய்ப்பளிக்கின்றன. உதாரணமாக முப்பினைல்பாசுபீன் என்ற கலவையைப் பொறுத்தவரை CuBr(P(C6H5)3) வடிவ ஒருங்கிணைப்பை அளிக்கிறது. இருந்தாலும் இவ்வகையான சேர்மங்கள் மிகவும் சிக்கலான கட்டமைப்பைக் கொண்டுள்ளன.
கரிம வேதியியல் பயன்கள்[தொகு]
சாண்ட்மேயர் வினையில் CuBr டையாசோனியம் உப்புகளை அதனுடன் தொடர்புடைய அரைல் புரோமைடுகளாக மாற்றும் வேலையைச் செய்கிறது:[2]
- ArN2+ + CuBr → ArBr + N2 + Cu+
மேற்கூறிய சிக்கலான கலவையில் கரிமத்தாமிர கரணிகளாக CuBr(S(CH3)2) பரவலாக பயன்படுத்தப்படுகிறது. அணு மாற்ற தனியுறுப்பு பல்படியாதல் வினைகளில் தொடர்புடைய CuBr கலவைகள் வினையூக்கிகளாகச் செயல்படுகின்றன. குறுக்கு ஐதரசன்நீக்க பிணைப்பு வினைகளில் தாமிரம் வினையூக்கியாகச் செயல்படுகிறது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ Holleman, A. F.; Wiberg, E. "Inorganic Chemistry" Academic Press: San Diego, 2001. ISBN 0-12-352651-5.
- ↑ 2.0 2.1 This report gives a procedure for generating CuBr: Jonathan L. Hartwell (1955). "o-Chlorobromobenzene". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0185.; Collective Volume, 3, p. 185.
- ↑ Jarowicki, K.; Kocienski, P. J.; Qun, L. "1,2-Metallate Rearrangement: (Z)-4-(2-Propenyl)-3-Octen-1-ol" Organic Syntheses, Collected Volume 10, p.662 (2004).http://www.orgsyn.org/orgsyn/pdfs/V79P0011.pdf