உள்ளடக்கத்துக்குச் செல்

டெர்பியம் பாசுபைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டெர்பியம் பாசுபைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
டெர்பியம் மோனோபாசுபைடு, பாசுபேனைலிடின்டெர்பியம்
இனங்காட்டிகள்
12037-64-8
EC number 234-861-0
InChI
  • InChI=1S/P.Tb
    Key: YSYUNNARJACYRQ-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 82855
  • P#[Tb]
பண்புகள்
PTb
வாய்ப்பாட்டு எடை 189.899
தோற்றம் கருப்பு படிகங்கள்
அடர்த்தி 6.82 கி/செ.மீ3
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

டெர்பியம் பாசுபைடு (Terbium phosphide) என்பது TbP என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். டெர்பியமும் பாசுபரசும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.[1][2]

தயாரிப்பு

[தொகு]

டெர்பியத்துடன் சிவப்பு பாசுபரசை சேர்த்து 800~1000 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கினால் டெர்பியம் பாசுபைடு உருவாகிறது.

சோடியம் பாசுபைடுடன் நீரற்ற டெர்பியம் குளோரைடைச் சேர்த்து 700~800 °செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினாலும் டெர்பியம் பாசுபைடு கிடைக்கிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

டெர்பியம் பாசுபைடு 40 கிகாபாசுக்கல் அழுத்தத்தில் சோடியம் குளோரைடு கட்டமைப்பில் இருந்து சீசியம் குளோரைடு கட்டமைப்பிற்கு மாறுகிறது.[3] இந்த சேர்மத்தை துத்தநாக சல்பைடுடன் சேர்த்து பச்சை நிற ஒளிர்பொருள் அடுக்கை உருவாக்கலாம்.[4]

Fm3m என்ற இடக்குழுவில் கனசதுரப் படிகத் திட்டத்தில் டெர்பியம் பாசுபைடு படிகமாகிறது.[5]

பயன்கள்

[தொகு]

இந்த சேர்மம் அதிக சக்தி, அதிக அதிர்வெண் பயன்பாடுகள் மற்றும் சீரொளி முனையம் மற்றும் பிற புகைப்பட இருமுனையங்களில் பயன்படுத்தப்படும் ஒரு குறைக்கடத்தியாகும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Terbium Phosphide" (in ஆங்கிலம்). American Elements. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  2. Knorr, K.; Loidl, A.; Kjems, J. K.; Lüthi, B. (2 December 1979). "Magnetic excitations in TbP" (in en). Journal of Magnetism and Magnetic Materials 14 (2): 270–272. doi:10.1016/0304-8853(79)90136-7. பன்னாட்டுத் தர தொடர் எண்:0304-8853. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0304885379901367?via%3Dihub. பார்த்த நாள்: 9 January 2022. 
  3. Adachi, Takafumi; Shirotani, Ichimin; Hayashi, Junichi; Shimomura, Osamu (28 December 1998). "Phase transitions of lanthanide monophosphides with NaCl-type structure at high pressures". Physics Letters A (in ஆங்கிலம்). pp. 389–393. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1016/S0375-9601(98)00840-8. பார்க்கப்பட்ட நாள் 9 January 2022.
  4. Raffius, G.; Kötzler, J. (7 February 1983). "Field-dependence of the first-order phase transition in terbium phosphide" (in en). Physics Letters A 93 (8): 423–425. doi:10.1016/0375-9601(83)90477-2. பன்னாட்டுத் தர தொடர் எண்:0375-9601. https://www.sciencedirect.com/science/article/abs/pii/0375960183904772?via%3Dihub. பார்த்த நாள்: 9 January 2022. 
  5. "Terbium Phosphide TbP". materialsproject.org. பார்க்கப்பட்ட நாள் 24 December 2021.
"https://ta.wikipedia.org/w/index.php?title=டெர்பியம்_பாசுபைடு&oldid=4155943" இலிருந்து மீள்விக்கப்பட்டது