உள்ளடக்கத்துக்குச் செல்

மோனோநைட்ரசன் மோனோசல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மோனோநைட்ரசன் மோனோசல்பைடு
Wireframe model of mononitrogen monosulfide
Wireframe model of mononitrogen monosulfide
Spacefill model of mononitrogen monosulfide
Spacefill model of mononitrogen monosulfide
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
மோனோநைட்ரசன் மோனோசல்பைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
அசானியமைல்சல்பானிடில்டைன்
வேறு பெயர்கள்
அமினோசல்பானிடைலிடைன்

தையோநைட்ரோசோ தனியுறுப்பு

தையோநைட்ரோசில் தனியுறுப்பு
இனங்காட்டிகள்
12033-56-6
Abbreviations (NS)(.)
ChEBI CHEBI:29451
ChemSpider 4576119
Gmelin Reference
660
InChI
  • InChI=1S/H3NS/c1-2/h1H3
    Key: ZGSDJMADBJCNPN-UHFFFAOYSA-N
யேமல் -3D படிமங்கள் Image
  • [N+][S-]
பண்புகள்
NS
வாய்ப்பாட்டு எடை 46.07 g·mol−1
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

மோனோநைட்ரசன் மோனோசல்பைடு (Mononitrogen monosulfide) என்பது SN என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கனிமச் சேர்மம் ஆகும். இதை நைட்ரசன் மோனோசல்பைடு என்ற பெயராலும் அழைப்பர். NO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட தனி உறுப்பான நைட்ரிக் ஆக்சைடின் கந்தகன் ஒத்த வரிசைச் சேர்மமாக இது கருதப்படுகிறது. நைட்ரசன் மற்றும் கந்தகச் சேர்மங்களின் கலவை வழியாக மின்சாரத்தைச் செலுத்தியும், நைட்ரசன் உடன் கந்தக ஆவியை வினைபுரியச் செய்தும் மோனோநைட்ரசன் மோனோசல்பைடைத் தயாரிக்கலாம். இச்சேர்மத்தின் இணைதிறன் எலக்ட்ரான்கள் நைட்ரிக் ஆக்சைடின் [1] இணைதிறன் எலக்ட்ரான்களுடன் ஒத்திருக்கின்றன. விண்வெளிக்குப் புறவெளியில் இச்சேர்மம் முதன்முதலில் Sgr B2 என்ற இராட்சத மூலக்கூறு மேகத்தில் கண்டறியப்பட்டது. அடுத்தடுத்து குளிர்ந்த அடர் மேகங்களிலும் வால்வெள்ளிகளின் உட்கரு உறையிலும் இச்சேர்மம் கண்டறியப்பட்டது [2].

ஒத்ததிர்வுக் கட்டமைப்பில் மோனோநைட்ரசன் மோனோசல்பைடு காணப்படுகிறது. இதில் பிணைப்பு வரிசை ஒன்றை கொண்டுள்ள ஓர் இனம் மின்சுமை பிரிப்பை முக்கியமான பயன்பாடாகக் கொண்டுள்ளது..

இதையும் காண்க

[தொகு]

கந்தக நைட்ரைடு

மேற்கோள்கள்

[தொகு]
  1. Burr, J. G. (1985). Chemi- and Bioluminescence. Clinical and Biochemical Analysis. Vol. 16. CRC Press. p. 99. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8247-7277-6.
  2. Canaves, M. V.; de Almeida, A. A.; Boice, D. C.; Sanzovo, G. C. (March 2002). "Nitrogen Sulfide in Comets Hyakutake (C/1996 B2) and Hale-Bopp (C/1995 O1)". Earth, Moon, and Planets 90 (1): 335–347. doi:10.1023/A:1021582300423. Bibcode: 2002EM&P...90..335C.