புரோப்பிலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரோப்பிலீன்
Skeletal formula of propene
Propylene
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
Propene
புரோப்பிலீன்
இனங்காட்டிகள்
115-07-1
யேமல் -3D படிமங்கள் Image
வே.ந.வி.ப எண் UC6740000
UN number 1077
In Liquefied petroleum gas: 1075
பண்புகள்
C3H6
வாய்ப்பாட்டு எடை 42.08 g/mol
தோற்றம் நிறமற்ற வளிமம்
உருகுநிலை
கொதிநிலை − 47.6 °C (225.5 K)
0.61 g/m3 (? °C)
பிசுக்குமை 8.34 µPa·s at 16.7 °C
கட்டமைப்பு
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 0.366 D (வளிமம்)
தீங்குகள்
முதன்மையான தீநிகழ்தகவுகள் Highly flammable,
Asphyxiant
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் External MSDS
R-phrases 12
S-phrases 9-16-33
தீப்பற்றும் வெப்பநிலை −108 °C
தொடர்புடைய சேர்மங்கள்
groups
தொடர்புடையவை
Allyl, Propenyl
தொடர்புடைய சேர்மங்கள் Propane, Propyne
Allene, 1-Propanol
2-Propanol
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

புரோப்பிலீன் அல்லது புரோப்பீன் என்பது C3H6 என்னும் வேதி வாய்பாடு கொண்ட நிறைவுறா கரிம வேதிச் சேர்மம். இதில் ஓர் இரட்டைப் பிணைப்பு கொண்ட கரிம அணுக்கள் உள்ளன. ஆல்க்கீன் என்னும் வகையான ஐதரோகார்பன் சேர்மங்களில் இரண்டாவது எளிமையான சேர்மம். இயற்கையில் கிடைக்கும் ஐதரோகார்பன்களின் மலிவில் (கிடைக்கும் அளவில்) இது இரண்டாவது.

பண்புகள்[தொகு]

அறை வெப்பநிலையில், புரோப்பீன் ஒரு நிறமற்ற, மணமற்ற வளிமம், ஆனால் எரிபொருளாகப் பயன்படுத்தும் பொழுது, இதில் மிகச் சிறிதளவு கெட்ட மணம் வீசும் தியோல் (thiol) அல்லது மெர்க்காப்டன்கள் (mercaptans) எனப்படும் கந்தக-ஐதரசச் சேர்மங்கள் சேர்த்து விற்பர். இதனால் இந்த எரி வளிம கசிந்தால் கெட்ட மணத்தால் உடனே உணர்ந்து கொள்ள இயலும்.

புரோப்பீன் வளிமம், எத்திலீனை விடக் கூடுதலான அடர்த்தியும் கொதிநிலையும் கொண்டுள்ளது. ஆனால் புரோப்பேன் (C3H8) வளியை விட கொதிநிலை சற்று குறைந்தது. வலுவான முனைபடும் பிணைப்பு (polar bond) இல்லாதபொழுதும், இச் சேர்மம் சிறு இருமுனைத் திருகம் (dipole moment) கொண்டுள்ளது. இதற்குக் காரணம் இதன் குன்றிய ஒற்றியம் (reduced symmetry) ஆகும் (இதன் முத்திரட்சி வெளியில் புள்ளிகள் குழு (points group) அமைப்பானது Cs).

புரோப்பீனின் விகித வேதி வாய்பாடு சைக்ளோபுரோப்பீன் (வளையபுரோப்பீன்)(cyclopropane) என்பதை ஒத்ததே, ஆனால் இவற்றில் உள்ள அணுக்கள் வேறான முறையில் பிணைப்புகள் கொண்டுள்ளன. ஆகவே இவை உள்பொருள் ஒருமையன்கள் ("structural isomers") ஆகும்.

உருவாக்கம்[தொகு]

புரோப்பீனை பெட்ரோலியம் (கல்நெய்) அல்லது மண்ணடிவளிமத்தில் (natural gas) இருந்து பெறலாம். மீளுருவாகாத, புதுப்பிக்கமுடியாத தொல்லுயிர் அழிவுகளில் இருந்து பெறும் எரிபொருள்களில் இருந்து பெறப்படுக்ன்றது. வடித்துப் பகுத்தல் (fractional distrillation) வழி எண்ணெய்த் தூய்மைப்படுத்துத் தொழிலகங்களில் புரோப்பீன் பிரித்தெடுக்கப்படுகின்றது. புரோப்பீனின் தேவை, அது கிடைக்கும் அளவை விஞ்சி உள்ளது, ஆகவே நீளமான பிற ஐதரோகார்பன் பொருள்களில் இருந்து கரிம-கரிம பிணைப்புகளைப் வேதி முறையில் பகுத்துப் புரோப்பீனைப் பெறுகின்றனர்.

உற்பத்தியும் பயன்பாடும்[தொகு]

பல்வேறு பணிகளுக்குப் பயன்படும் பாலிமராகிய பாலிபுரோப்பிலீன் செய்ய புரோப்பீன் அடிப்பொருளாகப் பயன்படுகின்றது. பெரும்பாலான புரோப்பீன் சீக்லர்-நட்டா வினையூக்கி (Ziegler-Natta catalyst) இயக்கம் வழி பல்லுறுப்பாக்கல் (polymerization) செய்யப்பட்டு பாலிபுரோப்பிலீன் ஆக்கப்படுகின்ரது. தொழிலகங்களில் அசிட்டோன், ஃவினால்(phenol) முதலியவை பெருமளவில் படைக்கப் பய்னபடும் குயூமீன் படிசெய்முறையில் உள்ளிடு பொருளாகப் பயன்படும் பென்சீனோடு சேர்ந்த மற்றொரு பொருள் புரோப்பீன். பிற வேதிப்பொருளான ஐசோபுரோப்பனால், ஆக்ரிலோநைட்ரைல், புரோப்பிலீன் ஆக்சைடு (ஈப்பாக்ஃசிபுரோப்பேன்) ஆகியவற்றைப் படைக்கவும் புரோப்பீன் பயன்படுகின்றது[1]

புரோப்பீன் படைப்பளவு 2000-2008 ஆண்டுகளில் ஏறத்தாழ 35 மில்லியன் டன்கள் அளவிலேயே (ஐரோப்பா, வட அமெரிக்கா மட்டும்) நிலையாக உள்ளது, ஆனால் கிழக்கு ஆசியாவிலும், குறிப்பாக சிங்கப்பூரில் படைப்பளவு கூடிக்கொண்டு வருகின்றது[2][3]. உலகில் புரோப்பீனின் மொத்த படைப்பளவு தற்பொழுது ஏறத்தாழ எத்திலீனின்] படைப்பில் பாதி.

அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்[தொகு]

  1. Budavari, Susan, தொகுப்பாசிரியர். (1996), "8034. Propylene", The Merck Index, Twelfth Edition, New Jersey: Merck & Co., pp. 1348–1349 
  2. www. petrochemistry.net Accessed August 2008
  3. Organic Chemistry 6th edition, McMurry,J., Brooks/Cole Publishing, Pacific Grove USA (2005)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புரோப்பிலீன்&oldid=2225725" இருந்து மீள்விக்கப்பட்டது