உள்ளடக்கத்துக்குச் செல்

கலிபோர்னியம்(III) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கலிபோர்னியம்(III) குளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
கலிபோர்னியம்(III) குளோரைடு
இனங்காட்டிகள்
13536-90-8
89759-77-3
InChI
  • InChI=1S/Cf.3ClH/h;3*1H/q+3;;;/p-3/i1-2;;;
    Key: SXTGCRCJBXYIFT-LBCWAVLQSA-K
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 135990930
  • [Cl-].[Cl-].[Cl-].[Cf+3]
பண்புகள்
CfCl3
வாய்ப்பாட்டு எடை 357.35 g·mol−1
தோற்றம் மரகதப் பச்சை திண்மம்
கட்டமைப்பு
படிக அமைப்பு அறுகோணம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

கலிபோர்னியம்(III) குளோரைடு (Californium(III) chloride) CfCl3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கனிம வேதியியல் சேர்மமாகும். கலிபோர்னியம் ஆக்சைடு (Cf2O3) மற்றும் கலிபோர்னியம் ஆலைடுகளான கலிபோர்னியம் புளோரைடு (CfF3), கலிபோர்னியம் அயோடைடு (CfI3) சேர்மங்களைப் போல இதிலும் கலிபோர்னியம் +3 என்ற ஆக்சிசனேற்ற நிலையில் உள்ளது.

தயாரிப்பு

[தொகு]

கலிபோர்னியம்(III) ஆக்சைடுடன் ஐதரசன் குளோரைடைச் சேர்த்து வினைபுரியச் செய்து கலிபோர்னியம்(III) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

Cf2O3 + 6 HCl → 2 CfCl3 + 3 H2O

பண்புகள்

[தொகு]

வேதிப் பண்புகள்

[தொகு]

500 பாகை செல்சியசு வெப்பநிலை வரை கலிபோர்னியம்(III) குளோரைடை சூடுபடுத்தினால் இது நீராற்பகுப்புக்கு உட்பட்டு கலிபோர்னியம் ஆக்சிகுளோரைடைக் கொடுக்கிறது.

இயற்பியல் பண்புகள்

[தொகு]

கலிபோர்னியம்(III) குளோரைடு நீரில் கரையும். இதனால் Cf3+ மற்றும் Cl அயனிகள் உருவாகின்றன. மரகதப் பச்சை நிறத்தில் காணப்படும் இந்த உப்பு அறுகோண வடிவத்தில் படிகமாகிறது.[1] கலிபோர்னியம்(III) குளோரைடு வலிமையான கதிரியக்கப் பண்பை வெளிப்படுத்துகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Cotton, Simon (2006). Lanthanide and Actinide Chemistry. West Sussex, England: John Wiley & Sons. p. 168. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-470-01006-8.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கலிபோர்னியம்(III)_குளோரைடு&oldid=3356295" இலிருந்து மீள்விக்கப்பட்டது