குயினோன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

குயினோன் (Quinone) என்பது கரிமவேதியியல் சேர்மங்களில் ஒரு வகுப்பைக் குறிக்கும். இவை பொதுவாக மணம் தருவதாக உள்ள பென்சீன், நாஃப்தலீன் போன்ற அரோமாட்டிக்குச் சேர்மங்களில் இருந்து பெறப்படுவன. இந்த அரோமாட்டிக்குச் சேர்மங்களில் உள்ள இரட்டைப்படை –CH= வேதிக்குழுமங்களை –C(=O)– என்னும் வேதிக்குழுக்களாக மாற்றி, இடையே தேவைப்படும் இரட்டைக்கரிம பிணைப்புகளை மாற்றியமைத்து, முற்றிலும் காஞ்சுகேட்டு ஆன (பி-ஆர்பிட்டால் பிணைப்புண்ட, தனித்தனி அணுவிடமிருந்து விடுபட்ட எதிமின்னிகள் கொண்ட காஞ்சுகேட்டு அமைப்பு கொண்ட) வளைய டையோன் (டைக்கீட்டோன்) அமைப்புகொண்ட ஒரு சேர்மம்.[1] இவ் வகுப்புச் சேர்மங்களில் கலப்பணு வளையச் சேர்மங்கள் சிலவும் அடங்கும்.

குயினோன்கள் மருத்துவப் பயன்பாட்டில் பாக்டீரியா எதிர்ப்புத் தன்மை, நோய்க்கட்டி (டியூமர்) எதிர்ப்புத் தன்மைகள் கொண்டதாகக் கருதப்படுகின்றன. சாயப்பொருளாகவும், குறிப்பாக நீலச்சாயப் பொருளாகப் பயன்படுகின்றது.

குயினோன் என்னும் சொல் அரோமாட்டிக்குக் குயினோன்களில் ஐதரச அணுக்களுக்கு மாற்றீடாக மற்ற அணுக்கள் அல்லது செயற்கூறு சேர்மங்களால் இணைந்திருக்கும் சேர்மங்களுக்கும் ஒரு பெயராகப் பயன்படுகின்றது.

படத்தொகுப்பு[தொகு]

மேற்கோள்களும் அடிக்குறிப்புகளும்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=குயினோன்&oldid=2147294" இலிருந்து மீள்விக்கப்பட்டது