வேதிவினை வழிமுறை
வேதியியலில், வேதிவினை வழிமுறை என்பது ஒரு ஒட்டுமொத்த வேதிமாற்றம் நிகழ்வதன் தொடக்க வினைகளின் படிப்படியான வரிசை முறையாகும்.[1]
வேதி வினை வழிமுறையானது, ஒட்டுமொத்த வேதிவினையின் ஒவ்வொரு படிநிலையிலும், என்ன நடைபெறுகிறது என்பதை விளக்கமாக விவரிக்க முயற்சி செய்யும் கருத்தியல்ரீதியான அனுமானமாகும். பெரும்பாலான நேரங்களில், பல வேதிவினைகளுக்கு விரிவான வழிமுறைகளை காணக்கூடிய வாய்ப்பில்லை. அனுமானமான வேதிவினை வழிமுறைகள் பின்வரும் கூறுகளைளக் கருத்தில் கொண்டு தேர்வு செய்யப்படுகின்றன. அவை, வெப்ப இயக்கவியல் அடிப்படையில் சாத்தியமானதா?, பிரித்தெடுக்கப்படவுள்ள இடைநிலை விளைபொருட்களுக்கான சோதிக்கத்தக்க ஆதாரங்கள் அல்லது வேதிவினையின் பண்பறி, அளவறிகின்ற இயல்புகள் ஆகியவையாகும். வினை வழிமுறையானது, ஒவ்வொரு வேதிவினையின் இடைநிலை விளைபொருட்கள், செயல்மிகு அணைவுச் சேர்க்கை விளைபொருள், நிலைமாறு நிலை மற்றும் பிணைப்புகள் எந்த வரிசையில் உடைக்கப்படுகின்றன?, எந்த வரிசையில் பிணைப்புகள் உருவாகின்றன என்பதையெல்லாம் விவரிக்கிறது. ஒரு முழுமையான வினை வழிமுறையானது, வினைபடு பொருட்கள் மற்றும் ஊக்கியாக பயன்படுத்தப்படும் பொருட்கள் ஏன் பயன்படுத்தப்படுகின்றன என்பதற்கான காரணத்தையும் விளக்குகிறது. மேலும், வினை வழிமுறையானது, வினைபடு பொருட்கள் மற்றும் வினைவிளைபொருட்களின் முப்பரிமாண வேதியியல், உருவாக்கப்பட்ட வினைவிளை பொருட்கள் மற்றும் ஒவ்வொன்றின் அளவு ஆகியவற்றையும் விவரிக்கிறது.
எதிர்மின்னி இரட்டையின் நகர்வை அம்புக்குறியின் மூலம் காட்டுவது வினை வழிமுறையை விளக்குவதாய் உள்ளது; உதாரணமாக, பென்சாயின் குறுக்க வினையின் வினை வழிமுறை பின்வரும் எடுத்துக்காட்டில் விளக்கப்பட்டுள்ளது.
ஒரு வினை வழிமுறையானது மூலக்கூறுகள் வினைபுரியும் வினையின் படிக்கான காரணத்தையும் விளக்க வேண்டும். பெரும்பாலும், ஒரு படிநிலையில் நடப்பது போல் தோன்றும் வினைகள் உண்மையில் பல படிநிலைகளைக் கொண்டுள்ளதாக உள்ளது.
வினை இடைநிலைப்பொருட்கள்
[தொகு]வினை இடைநிலைப்பொருட்கள் என்பவை பெரும்பாலும் நிலைத்தன்மையில்லாத. குறுகிய ஆயுட்காலம் கொண்ட(சில நேரங்களில் பிரித்தெடுக்கக்கூடிய வாய்ப்புள்ள) வேதிப்பொருட்களாக உள்ளன. இவை, வேதிவினையில் வினைபடு பொருட்களும் அல்லாமல், வினைவிளை பொருட்களும் அல்லாமல் வினை வழிமுறையின் படிநிலைகளில் உருவாகின்ற தற்காலிகமான வேதிப்பொருட்களாகும். பெரும்பாலும் வினை இடைப்பொருட்கள் தனி உறுப்புக்களாகவோ அல்லது அயனிகளாகவோ காணப்படுகின்றன.
வினைவேகவியலானது (ஒட்டுமொத்த வினையின் வேகச்சமன்பாடு மற்றும் வினையின் படிநிலைகளின் ஒப்பு வேகம்) வினையில் வினைபடும் பொருட்களை உத்தேசிக்கப்பட்ட நிலைமாறு நிலைக்கு மாறுதல் செய்யத் தேவையான ஆற்றலின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.
வேதிவினை வேகவியல்
[தொகு]ஒரு வினையின் வழிமுறைையக் குறித்த தகவல்களானவை, பெரும்பாலும், அந்த வினையின் வேகத்தைப் பற்றி அறிய உதவும் வினைவேகச் சமன்பாடு மற்றும் ஒவ்வொரு வினைபடு பொருளின் நிலையிலிருந்தும் வினையின் படி ஆகியவற்றிலிருந்து கிடைக்கிறது.[2]
கீழே தரப்பட்டுள்ள உதாரணத்தை எடுத்துக் கொள்வோம்:
- CO + NO2 → CO2 + NO
இந்த வினையில், வினையானது, என்ற வினைவேகச் சமன்பாட்டின்படி நிகழ்வதாகச் சோதனைகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளன. இந்த வடிவம் வினையின் வேகத்தைக் கண்டறியும் படியினைப் பற்றிய தகவலைத் தருகிறது. இந்த வினையில் வினையின் வேகத்தை நிர்ணயிக்கும் வினையின் படியாக இரண்டு மூலக்கூறுகள் NO2 க்கு இடையேயான வினை அமைகிறது. வினைவேகச்ஒ சமன்பாட்டை விளக்கும், வினைக்கான சாத்தியமுள்ள வினை வழிமுறை பின்வருமாறு:
- 2 NO2 → NO3 + NO (மெதுவான வினை)
- NO3 + CO → NO2 + CO2 (வேகமான வினை)
ஒவ்வொரு படிநிலையும் அடிப்படைப் படிநிலையாகும், மேலும் ஒவ்வொன்றும் தனக்கான வினைவேகச் சமன்பாட்டையும், மூலக்கூறு படிநிலையையும் கொண்டுள்ளன. அசலான வினையைப் பெற அடிப்படைப் படிநிலைகள் சேர்க்கப்பட வேண்டும்.
ஒரு வினையின் ஒட்டுமொத்த வினை வேகச்சமன்பாட்டை கண்டறியும் போது, மெதுவான படிநிலையே வினையின் வேகத்தைத் தீர்மானிக்கும் படிநிலையாக இருக்கிறது. ஏனெனில், மேலே குறிப்பிட்டுள்ள வினையில், முதல் படியானது, வேகம் குறைந்த, வினையின் வேகத்தை நிர்ணயிக்கும் படிநிலையாக உள்ளது. இந்தப்படிநிலையில் வினையானது இரண்டு NO2 மூலக்கூறுகளின் மோதலைக் கொண்டுள்ளதுடன், இது ஒரு இரண்டாம்படி வினையாக என்ற வினைவேகச் சமன்பாட்டைக் கொண்டதாகவும் உள்ளது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ March, Jerry (1985), Advanced Organic Chemistry: Reactions, Mechanisms, and Structure (3rd ed.), New York: Wiley, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-471-85472-7
- ↑ Espenson, James H. Chemical Kinetics and Reaction Mechanisms (2nd ed., McGraw-Hill, 2002) chap.6, Deduction of Reaction Mechanisms பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-07-288362-6