இரும்பு(III) செலீனைட்டு
இனங்காட்டிகள் | |
---|---|
15857-44-0 41124-06-5 28184-72-7 31745-39-8 | |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
| |
பண்புகள் | |
Fe2(SeO3)3 | |
தோற்றம் | மஞ்சள் நிறப் படிகங்கள் (முந்நீரேற்று)[1] |
அடர்த்தி | 3.537 கி·செ.மீ−3 (முந்நீரேற்று)[2] |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | R3c (No.161) (முந்நீரேற்று)[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு(III) செலீனைட்டு (Iron(III) selenite) என்பது Fe2(SeO3)3 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். நீரற்ற வடிவத்திலும் பல்வேறு நீரேற்று வடிவங்களாகவும் இரும்பு(III) செலீனைட்டு காணப்படுகிறது. 1.05 காரகாடித்தன்மை சுட்டெண் மதிப்பு கொண்ட பெரிக் குளோரைடும் செலினசு அமிலம் அல்லது சோடியம் செலினைட்டும் சேர்ந்து வினைபுரிவதால் இதன் எழுநீரேற்று உற்பத்தியாகிறது.[3] இரும்பு(III) செலீனைட்டின் ஐந்து நீரேற்று Fe2(OH)3(H2O)2(HSeO3)3 என்ற கட்டமைப்பிலுள்ளது.[4] முந்நீரேற்றின் ஒற்றை படிக மாறுபாடு அதன் கட்டமைப்பில் இரண்டு FeO6 எண்முகங்களும் ஒரு SeO32− நாற்கோணக வடிவவியலையும் கொண்டுள்ளது என்பதையும் சோதனை காட்டுகிறது.[1]
இரும்பு(III) செலீனைட்டின் நீரற்ற உப்பு 534 ° செல்சியசு வெப்பநிலையில் Fe2O3·2SeO2 சேர்மங்களாக சிதைவடைகிறது, 608 °செல்சியசு வெப்பநிலையில் 4Fe2O3·SeO2 சேர்மத்தை உருவாக்குகிறது, இறுதியாக 649 °செல்சியசு வெப்பநிலையில் Fe2O3 சேர்மம் கிடைக்கிறது.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 Aitor Larrañaga, José L. Mesa, José L. Pizarro, Luis Lezama, María I. Arriortua, Teófilo Rojo (May 2008). "Synthesis, thermal, spectroscopic and magnetic studies of the Mn(SeO3)·2H2O and Fe2(SeO3)3·3H2O selenites" (in en). Spectrochimica Acta Part A: Molecular and Biomolecular Spectroscopy 69 (3): 1020–1026. doi:10.1016/j.saa.2007.06.019. பப்மெட்:17681850. https://linkinghub.elsevier.com/retrieve/pii/S138614250700323X. பார்த்த நாள்: 2020-12-26.
- ↑ 2.0 2.1 Gerald Giester, Franz Pertlik (Aug 1994). "Synthesis and crystal structure of iron(III) selenate(IV) trihydrate, Fe2(SeO3)3 • 3H2O" (in en). Journal of Alloys and Compounds 210 (1–2): 125–128. doi:10.1016/0925-8388(94)90126-0. https://linkinghub.elsevier.com/retrieve/pii/0925838894901260. பார்த்த நாள்: 2020-12-26.
- ↑ Pinaev, G. F.; Volkova, V. P. Preparation and some properties of iron(III) selenite. Obshchaya i Prikladnaya Khimiya, 1970. 3: 33-39. ISSN: 0369-7045.
- ↑ Maldagalieva, R. A.; Shokanov, A. K. Infrared spectroscopic study of the state of water molecules in crystal hydrates of transition metal selenites. Trudy Khimiko-Metallurgicheskogo Instituta, Akademiya Nauk Kazakhskoi SSR, 1973. 22: 16-20. ISSN: 0516-0324.
- ↑ Bakeeva, S. S.; Muldagalieva, R. A.; Buketov, E. A.; Pashinkin, A. S. Thermal stability of neutral iron selenite. Trudy Khimiko-Metallurgicheskogo Instituta, Akademiya Nauk Kazakhskoi SSR, 1970. 15: 88-92. ISSN: 0516-0324.