இரும்பு ஆக்சிகுளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு ஆக்சிகுளோரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு ஆக்சிகுளோரைடு
இனங்காட்டிகள்
56509-17-2 N
ChemSpider 4955733 N
EC number 260-233-0
InChI
  • InChI=1S/ClH.Fe.O/h1H;;/q;+1;/p-1 N
    Key: YPLPZEKZDGQOOQ-UHFFFAOYSA-M N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6453349
  • [O][Fe]Cl
பண்புகள்
ClFeO
வாய்ப்பாட்டு எடை 107.29 g·mol−1
தோற்றம் தெளிவான, அடர் கருநீல, ஒளிப்புகாப் படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இரும்பு ஆக்சிகுளோரைடு (Iron oxychloride) என்பது FeOCl என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு [[கனிம வேதியியல் சேர்மமாகும். இந்தக் கருஞ்சிவப்புத் திண்மம், காட்மியம் குளோரைடின்[1] பண்பொத்த அடுக்குக் கட்டமைவை ஏற்றுள்ளது. ஈரக் காற்றில் இச்சேர்மம் மெல்ல நீராற்பகுப்பு அடைகிறது. இச்சேர்மம் எலக்ட்ரான் வழங்கிகளான நான்குதையாபுல்வேலீன் மற்றும் பிரிடீன் போன்றவறின் அடுக்கமைவில் இடைச்செருகலாகி கலப்பு இணைதிறன் உப்புகளாகின்றன. இவ்விடைச் செருகலால் மின்கடத்துகை அதிகரிக்கிறது மற்றும் நிறம் கருப்பாக மாறுகிறது.

இரும்பு(III) ஆக்சைடுடன் 370 ° செல்சியசு வெப்பநிலையில் பெரிக்குளோரைடு சேர்த்து பலநாட்களுக்கு வைத்திருந்து இரும்பு ஆக்சிகுளோரைடு தயாரிக்கப்படுகிறது[2].

Fe2O3 + FeCl3 → 3 FeOCl

மேற்கோள்கள்[தொகு]

  1. M. D. Lind "Refinement of the crystal structure of iron oxychloride" Acta Cryst. (1970). B26, 1058-1062. எஆசு:10.1107/S0567740870003618
  2. S. Kikkawa, F. Kanamaru, M. Koizumi "Layered Intercalation Compounds" Inorganic Syntheses, 1983, Volume 22, 86. எஆசு:10.1002/9780470132531.ch17
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு_ஆக்சிகுளோரைடு&oldid=2735899" இலிருந்து மீள்விக்கப்பட்டது