உள்ளடக்கத்துக்குச் செல்

இரும்பு(III) சல்பைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரும்பு(III) சல்பைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) சல்பைடு
வேறு பெயர்கள்
இரும்பு செசுகியுசல்பைடு

பெர்ரிக் சல்பைடு

இருயிரும்பு முச்சல்பைடு
இனங்காட்டிகள்
12063-27-3 Y
ChEBI CHEBI:75899 N
பப்கெம் 160957
பண்புகள்
Fe2S3
வாய்ப்பாட்டு எடை 207.90 கி/மோல் [1]
தோற்றம் மஞ்சள்-பச்சை [1]
அடர்த்தி 4.3 கி/செ.மீ3 [1]
உருகுநிலை சிதைவடைகிறது [1]
சிறிதளவு கரையும் [1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இரும்பு(III) சல்பைடு (Iron(III) sulfide) என்பது Fe2S3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட கனிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் பெர்ரிக் சல்பைடு அல்லது செசுகியுசல்பைடு என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இரும்பு சல்பைடு (FeS), பைரைட்டு (FeS2) போன்ற சல்பைட்டுகள் அறியப்பட்டுள்ள பிற சல்பைடுகளாகும். திண்மநிலையில் உள்ள இச்சேர்மம் கருப்புநிறத் தூளாகக் காணப்படுகிறது. ஆனால் சுற்றுப்புற வெப்பநிலையால் இது மஞ்சள் பச்சைத் தூளாக சிதைவடைகிறது. இயற்கையில் காணப்படாத இச்சேர்மம் ஒப்பீட்டளவில் நிலைப்புத்தன்மையற்ற ஒரு செயற்கைச் சேர்மமாகும்.

தயாரிப்பு மற்றும் பண்புகள்

[தொகு]

குளிரூட்டப்பட்ட இரும்பு(III) குளோரைடு கரைசலுடன் சோடியம் சல்பைடு கரைசலைச் சேர்த்து இரும்பு(III) சல்பைடு தயாரிக்கப்படுகிறது.

2 FeCl3 + 3 Na2S → Fe2S3↓ + 6 NaCl

இவ்வாறு தயாரிக்கப்படும் இரும்பு(III) சல்பைடு 20 பாகை செல்சியசு வெப்பநிலையில் சிதைவடைந்து இரும்பு சல்பைடு மற்றும் கந்தகமாக மாறுகிறது.[2]

Fe2S3 → 2 FeS + S↓

ஐதரோ குளோரிக் அமிலத்துடன் சேர்ந்து பெர்ரசு குளோரைடு, ஐதரசன் சல்பைடு மற்றும் கந்தகம் என சிதைவடைகிறது.:[3]

Fe2S3 + 4 HCl → 2 FeCl2 + 2 H2S↑ + S↓

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 1.3 1.4 Charles D. Hodgman, Handbook of Chemistry and Physics (1961), p.590
  2. Holleman, Wiberg: Inorganic Chemistry (2001), p. 1451; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-352651-5
  3. H. Roempp, Chemie (1997), S. 1099; பன்னாட்டுத் தரப்புத்தக எண் 3-13-734710-6
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரும்பு(III)_சல்பைடு&oldid=3299869" இலிருந்து மீள்விக்கப்பட்டது