இரும்பு(III) சல்பேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
இரும்பு(III) சல்பேட்டு
| |
வேறு பெயர்கள்
ஃபெர்ரிக் சல்பேட்டு
கந்தக அமிலம், இரும்பு(3+) உப்பு(3:2) | |
இனங்காட்டிகள் | |
10028-22-5 | |
ChEBI | CHEBI:53438 |
ChemSpider | 23211 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 24826 |
வே.ந.வி.ப எண் | NO8505000 |
| |
UNII | 4YKQ1X5E5Y |
பண்புகள் | |
Fe2(SO4)3 | |
வாய்ப்பாட்டு எடை | 399.88 கி/மோல் (நீரற்ற சேர்மம்) 489.96 கி/மோல் (பென்டாஐதரேட்டு) 562.00 கி/மோல் (நொனாஐதரேட்டு) |
தோற்றம் | சாம்பல் வெண்மை படிகங்கள் |
அடர்த்தி | 3.097 கி/செமீ3 (நீரற்ற சேர்மம்) 1.898 கி/செமீ3 (பென்டாஐதரேட்டு) |
உருகுநிலை | 480 °C (896 °F; 753 K) (நீரற்ற சேர்மம்) 175 °C (347 °F) (நொனாஐதரேட்டு) |
சிறிதளவு கரையும் | |
கரைதிறன் | எத்தனாலில் சிறிநதளவு கரையும் அசிட்டோன், ஈத்தைல் அசிட்டேட்டு ஆகியவற்றில் புறக்கணிக்கத்தக்க அளவில் கரையும் சல்பூரிக் அமிலம், அமோனியா ஆகியவற்றில் கரையாது |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.814 (நீரற்ற சேர்மம்) 1.552 (நொனாஐதரேட்டு) |
தீங்குகள் | |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
500 மிகி/கிகி (வாய்வழி, எலி) |
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA 1 மிகி/மீ3[1] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | இரும்பு(III) குளோரைடு இரும்பு(III) நைட்ரேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
இரும்பு (III) சல்பேட் (அல்லது ஃபெர்ரிக் சல்பேட்) (Ferric Sulfate) என்பது Fe2(SO4)3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய வேதிச்சேர்மம் ஆகும். இது பொதுவாக மஞ்சள் நிறமுடைய தண்ணீரில் கரையக்கூடிய உப்பாகும். பலவிதமான ஐதரேட்டுகளும் அறியப்படுகின்றன. இந்த உப்பின் கரைசல்கள் சாயமூன்றியாகவும், தொழில்துறை கழிவுகளுக்கு ஒரு உறைபொருளாகவும் பயன்படுத்தப்படுகின்றன. இது நிறமிகளிலும், அலுமினியம் மற்றும் எஃகுக்கான வேதித்தூய்மிப்படுத்தும் குளியல் ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகிறது. [2]
உற்பத்தி
[தொகு]பொதுவாக, இரும்புக் கழிவுகளிலிருந்து உருவாகும் கரைசலாக ஃபெரிக் சல்பேட் பயன்படுத்தப்படுகிறது. உண்மையான விவரக்குறிப்பு தெளிவற்றதாக உள்ளது. ஆனால், அதன் பயன்பாடுகள் அதிக தூய்மையான பொருள்களைக் கோருவதில்லை.
இரும்பு(III) சல்பேட்டு பெரும்பாலும் திண்மப் பொருளாக பிரிக்கப்படுவதை விட ஒரு கரைசலாக உருவாக்கப்படுகிறது. இது சல்பூரிக் அமிலம், இரும்பு சல்பேட்டின் சூடான கரைசல் மற்றும் ஒரு ஆக்ஸிஜனேற்றி ஆகியவற்றிற்கு வினையளிப்பதன் மூலம் பெரிய அளவில் தயாரிக்கப்படுகிறது. வழக்கமான ஆக்ஸிஜனேற்றிகள் குளோரின், நைட்ரிக் அமிலம் மற்றும் ஐதரசன் பெராக்சைடு ஆகியவை அடங்கும். [3]
- 2 FeSO4 + H2SO4 + H2O2 → Fe2(SO4)3 + 2H2O.
இயற்கையாகக் கிடைக்குமிடங்கள்
[தொகு]மைகாசைட்டு, (Fe3+, Al3+)2 (SO4)3 என்ற வாய்ப்பாட்டை உடைய கலப்பு இரும்பு-அலுமினிய சல்பேட்டு[4] என்பது இரும்பு (III) சல்பேட்டின் கனிம வடிவத்தின் பெயராகும். இந்த நீரற்ற வடிவம் மிகவும் அரிதாகவே கிடைக்கிறது. ஐதரேட்டுகள் மிகவும் பொதுவானவையாகும். கோக்விம்பைட் (நொனாஐதரேட்டு) அவற்றில் பெரும்பாலும் கிடைக்கின்ற ஒன்றாக உள்ளது. பராக்கோகிம்பைட் மற்றொன்று அரிதாகவே கிடைக்கக்கூடிய இயற்கை நொனாஐதரேட்டு ஆகும். கோர்னைலைட்டு (எப்டாஐதரேரேட்டு) மற்றும் குன்ஸ்டெடிட் (டெகாஐதரேட்டு) ஆகியவை அரிதாகவே காணப்படுகின்றன. லாசனைட்டு (எக்சா- அல்லது பென்டாஐதரேட்டு) ஒரு சந்தேகத்திற்குரிய இனமாகும். குறிப்பிடப்பட்ட அனைத்து இயற்கை ஐதரேட்டுகளும் தாது படுகைகளில் உள்ள இரும்பைக் கொணரும் முதன்மை தாதுக்கள் (முக்கியமாக பைரைட்டு மற்றும் மார்கசைட்டு) ஆக்சிஜனேற்றத்துடன் இணைக்கப்பட்ட நிலையற்ற கலவைகள் ஆகும். தாது படுகைகள் ஆக்ஸிஜனேற்ற மண்டலங்களின் கரைசல்களின் இரும்பு (III) சல்பேட் ஒரு முக்கியமான ஆக்ஸிஜனேற்றியாகும்.
பயன்கள்
[தொகு]இச்சேர்மமானது கடந்த முப்பதாண்டுகளுக்கும் மேலாக பல் மருத்துவத்துறையில் பல் அறுவை சிகிச்சையின் போது இரத்த இழப்பைத் தடுக்கும் காரணியாகப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. நீரில் காணப்படும் ஆர்செனிக், செலினியம், பாசுபரசு மற்றும் கன உலோக மாசுக்களை நீக்க இது பயன்படுகிறது. இச்சேர்மம் குடிநீர் அல்லது தொழில்துறை செயல்முறை நீர் வழங்கலில் மூல நீரின் சிகிச்சையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கழிவு நீரை சுத்திகரிக்கவும், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையங்களில் கசடுகளை அகற்றவும் பயன்படுத்தப்படுகிறது. கந்தக வாசனையை அகற்ற நீர் சுத்திகரிப்பு செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவத் துறையில் உடல் திசுக்கள் மற்றும் குழாய்களை சுருக்கும் மருந்துப் பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது. இச்சேர்மம் மண்ணைப் பதப்படுத்தும் காரணியாகவும் பயன்படுத்தப்படுகிறது.
வினைகள்
[தொகு]ஆலத்தைப் போன்றே இச்சேர்மமும் நீரில் சிறிதளவு காரத்தன்மையை நாடுகிறது. இயற்கையான காரத்தன்மை போதுமானதாக இல்லாமல் இருந்தால் சிறிதளவு பை கார்பனேட்டு அயனிகள், ஐதராக்சைடு அயனிகள் இவற்றின் நீரில் கரையக்கூடிய உப்புகளைக் கரைத்து கரைசலின் காரத்தன்மையானது அதிகரிக்கப்படுகிறது. பெர்ரிக் சல்பேட்டின் விரும்பத் தகுந்த வினைகள் பெரும்பாலும் காரகாடித்தன்மைச் சுட்டெண் 3.5 முதல் 9.0 வரையிலான அளவிலான கரைசல்களில் சிறப்பாக நடைபெறுகின்றன.
மேலும் காண்க
[தொகு]குறிப்புகள்
[தொகு]- ↑ "NIOSH Pocket Guide to Chemical Hazards #0346". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ Ferric sulfate. The Columbia Encyclopedia, Sixth Edition. Retrieved November, 2007.
- ↑ Iron compounds. Encyclopædia Britannica Article. Retrieved November, 2007
- ↑ Mikasaite