சாயமூன்றி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சாயமூன்றி (mordant) அல்லது சாய நிலைநிறுத்தி என்பது சாயத்தை துணி இழை போன்ற திசுக்களில் நன்றாக இறுகச் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வேதிப் பொருள் ஆகும். இது சாயத்துடன் அணைவுச் சேர்மங்களை உருவாக்குவதன் மூலம் இப்பணியைச் செய்கிறது.

டான்னிக் அமிலம், சோடியம் குளோரைடு, அலுமினியம், குரோமியம், செம்பு, இரும்பு, அயோடின், பொட்டாசியம் மற்றும் சோடியம் ஆகியவற்றின் உப்புகள் சாயமூன்றிகளாய்ப் பயன்படுகின்றன.

துணிகளுக்கு மட்டுமின்றி பாக்டீரியா மற்றும் உடல் திசுக்கள் ஆகியவற்றுக்கும் சாயமிடுவது வழக்கம். இவ்வாறு சாயமிடுவது அவற்றை நன்கு கண்டறிய உதவும். கிராமின் சாயமிடு முறையில் அயோடின் சாயமூன்றியாகப் பயன்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாயமூன்றி&oldid=2096748" இருந்து மீள்விக்கப்பட்டது