உள்ளடக்கத்துக்குச் செல்

பெரிக் ஆக்சலேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெரிக் ஆக்சலேட்டு
பெயர்கள்
முறையான ஐயூபிஏசி பெயர்
இரும்பு(3+) எத்தேன்டையோயேட்டு (2:3)
வேறு பெயர்கள்
இரும்பு(III) ஆக்சலேட்டு
இனங்காட்டிகள்
2944-66-3 (நீரிலி)
166897-40-1 (அறுநீரேற்று)
ChemSpider 147789
EC number 220-951-7
InChI
  • InChI=1S/3C2H2O4.2Fe/c3*3-1(4)2(5)6;;/h3*(H,3,4)(H,5,6);;/q;;;2*+3/p-6
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 168963
  • [Fe+3].[Fe+3].O=C([O-])C([O-])=O.[O-]C(=O)C([O-])=O.[O-]C(=O)C([O-])=O
பண்புகள்
C6Fe2O12
வாய்ப்பாட்டு எடை 375.747 கி/மோல்
தோற்றம் வெளிர் மஞ்சள் திண்மம் (நீரிலி)
எலுமிச்சை பச்சை திண்மம் (அறுநீரேற்று)
மணம் odorless
சிறிதளவு கரையும்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

பெரிக் ஆக்சலேட்டு (Ferric oxalate) என்பது C6Fe2O12 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு வேதிச் சேர்மம் ஆகும். பெரிக் அயனிகளும் ஆக்சலேட்டு ஈந்தணைவிகளும் சேர்ந்து உருவாகும் இச்சேர்மம், இரும்பு(III) ஆக்சலேட்டு (iron(III) oxalate) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. ஆக்சாலிக் அமிலத்தின் பெரிக் உப்பான பெரிக் ஆக்சலேட்டு வெளிர் மஞ்சள் நிறத்தில் காணப்படுகிறது. நீரேற்ற வினையின் மூலம் பெரிக் ஆக்சலேட்டை அடர் பச்சை நிற Fe2(C2O4)3·6H2O சேர்மமாக மாற்ற இயலும்.

மற்ற ஆக்சலெட்டுகளைப் போல பெர்ரிக் ஆக்சலேட்டும் தற்காலிக பல் மருத்துவத்தில் பயன்படுத்த ஆராயப்படுகிறது.[1] சிலவகை பற்பசை தயாரிப்புகளில் இதைப் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் இதன் செயற்படுதிறன் கேள்விக்குறியாகவே கருதப்பட்டு வருகிறது.[2]

கல்லிவகை புகைப்பட அச்சிடும் செயமுறையில் ஒளியுணர் பொருளாக பெரிக் ஆக்சலேட்டு பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Gillam, D. G.; Newman, H. N.; Davies, E. H.; Bulman, J. S.; Troullos, E. S.; Curro, F. A.. "Clinical evaluation of ferric oxalate in relieving dentine hypersensitivity". Journal of Oral Rehabilitation 31 (3): 245–250. doi:10.1046/j.0305-182X.2003.01230.x. 
  2. Cunha-Cruz, J.; Stout, J. R.; Heaton, L. J.; Wataha, J. C. (29 December 2010). "Dentin Hypersensitivity and Oxalates: a Systematic Review". Journal of Dental Research 90 (3): 304–310. doi:10.1177/0022034510389179. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிக்_ஆக்சலேட்டு&oldid=2735898" இலிருந்து மீள்விக்கப்பட்டது