சதுரங்கப்பலகை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
abcdefgh
8
Chessboard480.svg
8
77
66
55
44
33
22
11
abcdefgh
சதுரங்கப் பலகையின் தோற்றம்

சதுரங்கப்பலகை (Chessboard) என்பது நீளப்பாங்காகவும், கிடைப்பாங்காகவும் சதுரங்களைக் கொண்டிருக்கும், சதுரங்கம் விளையாடப் பயன்படும் பலகை ஆகும். இப்பலகை அறுபத்து நான்கு சதுரங்களைக் கொண்டதாகும் (கிடையாக எட்டு, நிலைக்குத்தாக எட்டு). இச்சதுரங்கள் இரண்டு வெவ்வேறு நிறங்களில் (மென்மையான மற்றும் கடுமையான) காணப்படும். பொதுவாக கருப்பு மற்றும் வெள்ளை எனும் நிறங்களின் பெயர்கள் பயன்படுத்தப்படுகின்றன. விளையாடும்போது இந்தப் பலகை விளையாடுபவர்களின் வலது கை மூலையில் வெள்ளைச் சதுரம் வரும் வகையில் வைக்கப்படுவது சதுரங்க விதிமுறைகளில் ஒன்றாகும். சதுரங்க பலகையின் அளவு அதில் பயன்படுத்தும் காய்களின் அளவிற்கேற்ப மாறுபடும்.

சதுரங்கப் பலகை

வெள்ளை நிறக் காய்களுடன் விளையாடுபவரின் பக்கத்திலிருந்து பார்க்கும் போது பலகையின் செங்குத்து வரிசைகள் a இலிருந்து h வரை பெயரிடப்பட்டிருக்கும். அதேபோல் கிடை வரிசைகள் 1 இலிருந்து 8 வரை பெயரிடப்பட்டிருக்கும்.


வெளியிணைப்புக்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

படக்காட்சியகம்[தொகு]

DGT மின்னணு சதுரங்கப் பலகை கடிகாரம் மற்றும் கணிப்பொறியுடன்
மேசையின் மீது வண்ணம் தீட்டப்பட்ட அல்லது உட்குழியாகச் செதுக்கப்பட்ட சதுரங்கப் பல்கை .
கண்ணாடியால் உருவாக்கப்பட்ட அலங்கார சதுரங்கப் பலகை
சுவீடன் நாட்டுப் போட்டிகளுக்கான தரப்படுத்தப்பட்ட சதுரங்கப் பலகை
பச்சை மற்றும் வெள்ளை நிறத்திலான சதுரங்கச் சுருள்
பச்சை மற்றும் பொலிவான வெள்ளை நிறத்திலான சதுரங்கச் சுருள் பலகை
பூங்காவில் ஒரு சதுரங்கப் பலகை
"https://ta.wikipedia.org/w/index.php?title=சதுரங்கப்பலகை&oldid=1799360" இருந்து மீள்விக்கப்பட்டது