வேதியியற் சமநிலை
வேதியியற் சமநிலை என்பது, ஒரு வேதியியற் தாக்கத்தின்போது, தாக்கத்தில் ஈடுபடும் வினைபொருட்களும் (reactants), வினைபடு பொருட்களும்(products), ஒரே செறிவு நிலையில் மாற்றமின்றி இருக்கும் நிலையைக் குறிக்கும். இந் நிலை, பொதுவாக, முன்நோக்கிய தாக்கமும், பின்நோக்கிய தாக்கமும் ஒரே அளவு வீதத்தில் நடைபெறுவதால் ஏற்படுகின்றது. முன்நோக்கிய, பின்நோக்கிய தாக்க வீதங்கள் என்றும் பூச்சியமாக இருப்பதில்லை, ஆனால் அவை ஒரே அளவு வீதத்தில் நடைபெறுவதால், மொத்தமாகப் பார்க்கும்போது பொருட்களின் அளவுகளில் மாற்றங்கள் எதுவும் இருப்பதில்லை. இச் செயற்பாடு இயக்கச் சமநிலை எனப்படுகின்றது. அடிப்படையில், இங்கே தாக்கங்கள் முழுமையாக நடைபெற்று முடிவதில்லை ஆனால், ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் சமநிலை அடைகின்றது.[1][2][3]
இவ்வாறு ஓர் அமைப்பில் எந்தவொரு வேதிவினையும் நிகழாதிருந்தாலோ, அல்லது ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்குப் பரவலின் வழியாகப் பொருள் நகர்ச்சி இல்லாதிருந்தாலோ அவ்வமைப்பில் வேதியியற் சமநிலை இருக்கிறது எனலாம். இரண்டு அமைப்புகள் வேதியியற் சமநிலையில் இருந்தால் அவற்றின் வேதிப்பண்பு சமமாக இருக்கும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Atkins, Peter; De Paula, Julio (2006). Atkins' Physical Chemistry (8th ed.). W. H. Freeman. pp. 200–202. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-7167-8759-8.
- ↑ தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் அனைத்துலக ஒன்றியம். "chemical equilibrium". Compendium of Chemical Terminology Internet edition.
- ↑ Berthollet, C.L. (1803). Essai de statique chimique [Essay on chemical statics] (in பிரெஞ்சு). Paris, France: Firmin Didot. On pp. 404–407, Berthellot mentions that when he accompanied Napoleon on his expedition to Egypt, he (Berthellot) visited Lake Natron and found sodium carbonate along its shores. He realized that this was a product of the reverse of the usual reaction Na2CO3 + CaCl2 → 2NaCl + CaCO3↓ and therefore that the final state of a reaction was a state of equilibrium between two opposing processes. From p. 405: " … la décomposition du muriate de soude continue donc jusqu'à ce qu'il se soit formé assez de muriate de chaux, parce que l'acide muriatique devant se partager entre les deux bases en raison de leur action, il arrive un terme où leurs forces se balancent." ( … the decomposition of the sodium chloride thus continues until enough calcium chloride is formed, because the hydrochloric acid must be shared between the two bases in the ratio of their action [i.e., capacity to react]; it reaches an end [point] at which their forces are balanced.)