வேதி வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(வேதியியற் தாக்கம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேதியியற் தாக்கம் அல்லது வேதிவினை, இரசாயனத் தாக்கம், chemical reaction) எனப்படுவது வேதியியற் பொருட்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து வேறு வேதியியற் பொருட்களாக மாறும் செயற்பாடு ஆகும். வேதியியற் தாக்கங்களின் போது வேதியியல் மாற்றங்கள் ஏற்பட்டுத் தொடக்கத்தில் இருந்த பொருட்களிலும் வேறான, ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புதிய வேதியியற் பொருட்கள் விளைவாகக் கிடைக்கின்றன.

தகனம் ஓர் வேதியியற் தாக்கம் ஆகும்

பொதுவாக வேதியியற் சமன்பாடுகளின் அடிப்படையில் நோக்கும்போது, வேதியியற் தாக்கம் என்பதின் கருத்துரு, அடிப்படைத் துணிக்கைகள் மாற்றமுறுவதைக் குறித்தாலும், வேதியியற் பிணைப்புக்களின் உருவாக்கத்தையும், உடைவையும் ஏற்படுத்தும், இலத்திரன்களின் இடமாற்றமே தாக்கங்களின் அடிப்படையாக உள்ளது.

வேதியியற் தாக்கங்களை அடிப்படையில், ரீடொக்ஸ் தாக்கம் (redox reactions), அமிலம்சார் தாக்கம் (acid-base reactions) என இரண்டு வகைகளாகக் காணமுடியும். முதல் வகையில், தனி இலத்திரனின் இடமாற்றமும், இரண்டாவதில் இலத்திரன் இணைகளின் இடமாற்றமும் தொடர்புபட்டுள்ளன.

வேதியியல் தாக்க வகைகள்[தொகு]

அடிப்படையில் வேதியியல் தாக்கங்கள் நான்கு வகைப்படும்.

தொகுப்புத் தாக்கங்கள்[தொகு]

இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வேதியியல் கூறுகள் ஒன்றிணைந்து ஒரு தனிக்கூறை உருவாக்கும் முறையிலான தாக்கங்கள் வேதியியல் தொகுப்புத் தாக்கங்கள் எனப்படும். இது பின்வரும் பொதுச் சமன்பாட்டினால் காட்டப்படும்

A + B → AB

எடுத்துக்கட்டாக ஐதரசனும் ஒட்சிசன் மூலக்கூறும் இணைந்து நீர் மூலக்கூறு உருவாகும் தாக்கம்.[1]

சேர்க்கைத் தாக்கங்கள்[தொகு]

இது தொகுப்புத் தாக்கத்திற்கு நேர் மாறான செயற்பாடாகும். இங்கு சிக்கலான தனிக் கூரொன்று பிரிகையுற்று பல சிறிய கூறுகளை ஆக்கும். இதன் பொதுவான தாக்க வடிவம்:

AB → A + B [1][2]

ஒற்றை இடப்பெயர்ச்சித் தாக்கம்[தொகு]

இங்கு தாக்கத்தில் ஈடுபடும் தனிக்கூறு சேர்வை ஒன்றிலுள்ள ஒரு பகுதியை இடம்பெரயச் செய்து அதனுடன் தான் சேர்வையை ஆக்கும்.[1]

இதன் பொதுவான தாக்க வடிவம்:

AB + C → CB + A

இரட்டை இடப்பெயர்ச்சித் தாக்கம்[தொகு]

இங்கு இரண்டு சேர்வைகள் தங்களுக்குள் இடம்மாறிப் பிணைப்புகளை ஏற்படுத்திக் கொள்ளும்.[1]

இதன் பொதுவான தாக்கச் சமன்பாட்டு வடிவம்:

AB + CD → AD + CB

எடுத்துக்காட்டு: ஈயநைத்திரேற்று பொட்டாசியம் அயடைட்டுடன் தாக்கமுறுவது.

Pb(NO3)2 + 2 KI → PbI2 + 2 KNO3

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 1.3 To react or not to react?. Utah State Office of Education. Retrieved 4 June 2011.
  2. Six Types of Chemical Reactions – MrGuch ChemFiesta.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதி_வினை&oldid=2222504" இருந்து மீள்விக்கப்பட்டது