வேதியியற் சமன்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

வேதியியற் சமன்பாடு என்பது, வேதியியற் தாக்கங்களை எழுதுவதற்கான ஒரு குறியீட்டு முறையாகும். இதில் தாக்கமுறும் பொருட்கள் இடது புறத்திலும், விளைவுகள் வலது புறத்திலும் காட்டப்படுகின்றன. [1] ஒவ்வொரு வேதியியற் பொருளுக்கும் முன் எழுதப்படும் எண் தாக்கத்தில் ஈடுபடும் பொருளின் அளவைக் குறிக்கிறது. ஜீன் பெகுயின் (Jean Beguin) என்பவர் முதன் முதலில் 1615 ஆம் ஆண்டில் வேதியியற் சமன்பாட்டைப் பயன்படுத்தினார்.

தாக்கமுறும் பொருட்களுக்கும், விளைவுகளுக்கும் இடையிலான தொடர்புகளைக் குறிப்பிடுவதற்காக வெவ்வேறு வகையான குறியீடுகள் பயன்படுத்தப்படுகின்றன. தாக்கமுறும் பொருட்களின் அளவுகள் தொடர்பில் அமையும்போது " = " குறியீடும், முன்னோக்கிய தாக்கத்திக் குறிக்க " → " குறியும், மீள்தாக்கத்தைக் குறிக்க " " குறியீடும், சமநிலையைக் குறிக்க " " குறியீடும் பயன்படுகின்றன.

எடுத்துக்காட்டாக, மீத்தேன் ஆக்சிஜனின் (இலங்கை: ஒட்சிசன்) எரியும் போதான தாக்கம் பின்வருமாறு குறிக்கப்படுகின்றது.


CH4 + 2 O2 → CO2 + 2 H2O,


ஹேபர் செயல்முறை (Haber process) எனப்படும் மீள்தாக்கம் பின்வருமாறு குறிக்கப்படுகின்றது.


N2(g) + 3H2(g) 2NH3(g) + ΔH.


ஒரு வேதியியல் சமன்பாடு, தாக்கத்தோடு தொடர்புடைய அளவுகளைக் (stoichiometry) காட்டவேண்டும். இரண்டு பக்கங்களிலும் சம அளவான ஒரே அணுக்கள் காணப்படின் அது சமநிலைச் சமன்பாடு எனப்படும்.

வேதியியற் சமன்பாடுகளிள் ஐந்து அடிப்படையான வகைகள் உள்ளன. அவை:

  1. தொகுப்புச் சமன்பாடுகள் (synthesis equations)
  2. பிரிகைச் சமன்பாடுகள் (decomposition equations)
  3. ஒற்றை மாற்றீட்டுச் சமன்பாடுகள் (single replacement equations)
  4. இரட்டை மாற்றீட்டுச் சமன்பாடுகள் (double replacement equations)
  5. எரிதல் சமன்பாடுகள் (combustion equations)

குறிப்புக்கள்[தொகு]

  1. IUPAC Compendium of Chemical Terminology
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதியியற்_சமன்பாடு&oldid=2222505" இருந்து மீள்விக்கப்பட்டது