எல்செவியர்
Jump to navigation
Jump to search
எல்செவியர் (Elsevier) உலகின் மிகப் பெரிய மருத்துவ, அறிவியல் பதிப்பகம் ஆகும். இது றீட் எல்செவியர் குழுமத்தின் ஓர் நிறுவனம் ஆகும். நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டம் நகரத்தில் தலைமையகத்தைக் கொண்டியங்கும் இப்பதிப்பகம் இங்கிலாந்து, ஐக்கிய அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் இயங்குகிறது. இப்போதுள்ள எல்செவியர் நிறுவனம் 1880 இல் உருவானது.