பேச்சு:வேதி வினை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இது வேதியியல் வினை என்று இருக்க வேண்டும் என நினைக்கிறேன். தாக்கம் என்பது impact என்பதற்கு பொருந்தும் ஒரு சொல். இயைவு என்பதும் ஒரு வேதியியலில் நிகழ்வது போல நுட்பமாய் தொழிற்படும் வினையைக் குறிக்கச் சிறந்த சொல். இயை (சேர்ந்து புணர்தல், சேர்ந்து வினை நிகழ்த்துதல்), இயைத்தல் (சேர்ந்து புணரச்செய்தல்), இயைபு (reaction-action of joining) என எல்லா வடிவுகளிலும் இவ்வினை உள்ளது. தாக்கம் எனப்து பொருந்தாது என்பது என் கருத்து. Chemical attack என்பதற்கு வேதியியல் தாக்கம் பொருந்தும். --செல்வா 12:55, 6 ஏப்ரல் 2007 (UTC)

தமிழ்நாட்டுப் பாடநூல்களில் வினை என்று தான் குறிப்பிடப்படுகிறது--ரவி 15:04, 6 ஏப்ரல் 2007 (UTC)

இலங்கையில் reaction என்பதற்குத் தாக்கம் என்ற சொல்லைத்தான் பயன்படுத்துகிறோம். பாட நூல்களிலும் அவ்வாறே உள்ளது. Mayooranathan 18:10, 6 ஏப்ரல் 2007 (UTC)

செல்வா குறிப்பிடும் ;வினை' எனும் சொல் மிக பொருந்தும் என்பது என் கருத்து.சில வேளைகளில் இலங்கை பாடவாக்க குழுவால் தோற்றுவிக்கப்பட்ட சொல் முழுமை பெறுவது கிடையாது.இது பற்றி பல் உரையாடல் இடம்பெற்றுள்ளன.--கலாநிதி 17:06, 7 ஏப்ரல் 2007 (UTC)

மயூரநாதன், கலாநிதி, ரவி உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.--செல்வா 17:22, 7 ஏப்ரல் 2007 (UTC)
இலங்கையில் சில இடங்களில் இடைவினை என்ற பதமும் பயன்படுத்தப்படுகிறது. ஆயினும் பொதுவாக பாடநூல்களில் தாக்கம் என்பதுவே பயன்பட்டிலுள்ளது.--சஞ்சீவி சிவகுமார் (பேச்சு) 04:49, 21 சூன் 2012 (UTC)

வினை என்பதே நானும் அறிந்த ஒன்று. வேதியியல் வினை (அ) சுருக்கமாக வேதிவினை என்று குறிப்பிட்டாலே போதுமானது. இதையொட்டி வினைகலன், வினையூக்கி போன்ற பல சொற்கள் அமையும். --இரா. செல்வராசு (பேச்சு) 23:14, 6 செப்டம்பர் 2013 (UTC)

"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:வேதி_வினை&oldid=1745151" இருந்து மீள்விக்கப்பட்டது