வேதிப்பண்பு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
வேதிப்பண்பு (Chemical Potential) என்பது வெப்ப இயக்கவியலில் ஒரு வேதிவினையின் போது உட்கவரப்படும் அல்லது வெளியிடப்படும் நிலை ஆற்றலைப் போன்றதொரு பண்பு ஆகும்.
ஒரு கலவை அல்லது கரைசலில் இருக்கும் பல கூறுகளில், ஒன்றின் மோல்களை மட்டும் அதிகரிக்கும் போது அதன் உள்ளாற்றல் அல்லது நிலை ஆற்றல் அதிகரிக்கும் வீதத்தை வேதிப்பண்பு என்று கூறலாம்.
மூலக்கூற்றுத் துகள்கள் உயர் வேதிப்பண்புள்ள இடத்தில் இருந்து குறை வேதிப்பண்பு உள்ள இடத்திற்கு நகரும் இயல்பை உடையன. இவ்வகையில் பிற இயற்பியல் துறைகளில் உள்ளது போல், "அழுத்தம் அல்லது ஆற்றல் (potential)" போன்றதே வேதிப்பண்பும். எவ்வாறு மலைச்சரிவில் உருளும் பந்தானது அதிக நிலையாற்றல் உள்ள இடத்தில் இருந்து குறை நிலையாற்றல் உள்ள இடத்திற்குச் செலுத்தப் படுகிறதோ, அதைப் போன்றே நகர்ச்சி, வேதிவினை, உருகல், கரைதல், பரவல் போன்ற நிறை மாற்ற நிகழ்வுகளின் போது, முலக்கூறுகள் அதிக வேதிப்பண்புள்ள இடங்களில் இருந்து குறைவான வேதிப்பண்புள்ள இடத்திற்குச் செல்லும்.
ஒரு எளிய உதாரணமாக, ஒரு கரைசலில் அதிகச் செறிவுள்ள இடத்தில் இருந்து மூலக்கூறுகள் குறை செறிவுள்ள இடத்திற்கு நகர்வதைக் குறிப்பிடலாம். இந்த நகர்ச்சி கரைசலின் செறிவு அனைத்து இடங்களிலும் சமனாகும் வரை நடைபெறும் என்பதைப் பார்க்கலாம்.