ஆலன்டாயின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலன்டாயின்
Allantoin.svg
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
(2,5-Dioxo-4-imidazolidinyl) urea
வேறு பெயர்கள்
• Alcloxa
• Aldioxa
• Ureidohydantoin
•Glyoxyldiureide
•Hemocane
• 5-Ureidohydantoin
• Vitamin U (formerly)[1]
இனங்காட்டிகள்
97-59-6 Yes check.svgY
ChEMBL ChEMBL593429 Yes check.svgY
ChemSpider 199 Yes check.svgY
யேமல் -3D படிமங்கள் Image
Image
KEGG D00121 Yes check.svgY
UNII 344S277G0Z Yes check.svgY
பண்புகள்
C4H6N4O3
வாய்ப்பாட்டு எடை 158.12 g·mol−1
தோற்றம் நிறமற்ற படிகம் போன்ற பொடி
அடர்த்தி 1.45 கிராம்/செ.மீ3
உருகுநிலை
0.5% at 25 ° செல்சியசு
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Allantoin MSDS
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

ஆலன்டாயின் (allantoin) என்பது C4H6N4O3 எனும் மூலக்கூறு வாய்பாடு உடைய ஒரு வேதிச்சேர்மம். மனிதன் மற்றும் குரங்கினம் தவிர பிற பாலூட்டிகளின் பியூரின் (purine) சிதைமாற்ற விளைபொருளான இது அவற்றின் சிறுநீரில் கழிவுப்பொருளாக வெளியேற்றப்படுகிறது. மனிதன் மற்றும் குரங்கினங்களில் யூரிக் அமிலத்தை ஆலன்டாயினாக மாற்றும் நொதி இல்லை. எனவே யூரிக் அமிலம் வெளியேற்றப்படுகிறது. மீன்களிலோ ஆலன்டாயின் அம்மோனியாவாக உடைக்கப்படுகிறது. தாவரங்கள் மற்றும் பாக்டீரியங்களிலும் இது முக்கிய வளர்சிதை மாற்ற இடைபொருளாக உள்ளது.

பயன்பாடு[தொகு]

செயற்கையாக தயாரிக்கப்படும் ஆல்லன்டாயின் பாதுகாப்பானது; நச்சுத்தன்மை அற்றது; ஈரப்பதமாக்கும் மற்றும் தோல்பாதுகாக்கும் தன்மை கொண்டது. எனவே இது பற்பசை, உதட்டுச் சாயம், பருவுக்கான களிம்பு உள்ளிட்ட பல அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தோல் மருந்துகளில் முக்கியப் பொருளாக உள்ளது.

மேற்கோள்கள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலன்டாயின்&oldid=3582138" இருந்து மீள்விக்கப்பட்டது