ஆர்னிதின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
L-ஆர்னிதின்
ImageFile
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 70-26-8
பப்கெம் 6262
KEGG D08302
ம.பா.த Ornithine
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C5H12N2O2
மோலார் நிறை 132.16 கி/மோல்
உருகுநிலை

140 ºC

நீரில் கரைதிறன் கரையும்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.

ஆர்னிதின் (Ornithine) நேரடியாக டி.என்.ஏ மூலக்கூறிலிருந்து குறிமுறையீடு செய்யப்படாத, யூரியா சுழற்சியில் முக்கிய பங்கு வகிக்கும், அமினோ அமிலமாகும். யூரியா உருவாக்கத்தில் ஆர்ஜினின் மீது ஆர்ஜினினேஸ் நொதி வினை புரியும்போது ஆர்னிதின் ஒரு விளை பொருளாகக் கிடைப்பதால் ஆர்னிதின் நைட்ரசனை நீக்கப் பயன்படுத்தும் யூரியா சுழற்சியில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இவ்வேதி வினையில் ஆர்னிதின் மறுசுழற்சி செய்யப்படுவதால், ஒருவகையில் இதை வினையூக்கி எனலாம். முதலில் அமோனியா கார்பமோயில் பாஸ்பேட்டாக மாற்றப்படுகிறது. இது, யூரியாவின் பாதி பகுதியாகும். பிறகு, ஆர்னிதின் கார்பமோயில் பாஸ்பேட்டால் (இறுதி பகுதியிலுள்ள நைட்ரசன் அணுவில்) யூரியாவின் கிளைப் பொருளாக மாற்றப்படுகிறது. இன்னொரு நைட்ரசன் அஸ்பார்டேட்டிலிருந்து இணைக்கப்பட்டு நைட்ரசன் நீக்கப்பட்ட ஃபியூமரேட்டும், ஆர்ஜினினும் உருவாக்கப்படுகிறது. பின்னர், ஆர்ஜினின் நீராற்பகுக்கப்பட்டு ஆர்னிதின் மற்றும் யூரியா உருவாகிறது. யூரியாவின் நைட்ரசன்கள் அமோனியா மற்றும் அஸ்பார்டேட்டிலிருந்து வருவதால் ஆர்னிதினின் நைட்ரசன் சிதைவடையாமல் உள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்னிதின்&oldid=1484292" இருந்து மீள்விக்கப்பட்டது