உள்மூச்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உட்சுவாசம்(Inhalation) எனும் உடற்றொழிலியல் செயல்முறையில் புதிய காற்று, நுரையீரல்களுக்குள்ளாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இது ஓர் செயல்மிகு நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியில் வெளிப்புற விலா எலும்பிடைத் தசைகள், உதரவிதானம் பங்கு பெறுகின்றன.

இயல்பான சுவாசத்தின் போது, வெளிப்புற விலா எலும்பிடைத் தசைகள் சுருங்குவதால் விலா எலும்புகள் முன்புறத்தில் சற்று மேல்நோக்கி உயருகின்றன. இச்செயலால் மார்பறை பக்கவாட்டிலும் முதுகு வயிற்றுப்புற வாட்டிலும் பெரிதாகிறது. உதரவிதானத்தின் வட்டத்தசைகள் சுருங்குவதால் மேல்நோக்கி உயர்ந்திருந்த உதரவிதானம் தட்டையாகிறது. இந்நிகழ்ச்சியால் மார்பறையின் மேல் கீழ் வாட்டில் கொள்ளளவு கூடுகிறது. மேற்கூறிய அனைத்துத் தசைச் செயல்களால் மார்பறையின் கனவளவு அதிகரிக்கும். இதனால் நுரையீரலினுள் காற்றின் அழுத்தம் வளிமண்டலத்தின் அழுத்தத்தை விடக் குறையும். இதனை ஈடுசெய்வதற்கென வெளிக்காற்று காற்றுப் பாதைகளின் வழியே நுரையீரலினுள் நுழையும்.


"https://ta.wikipedia.org/w/index.php?title=உள்மூச்சு&oldid=1466657" இருந்து மீள்விக்கப்பட்டது