சோடியம் பைசல்பைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோடியம் பைசல்பைட்டு
Ball-and-stick model of a bisulfite anion (left) and a sodium cation (right)
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
சோடியம் ஐதரசன் சல்பைட்டு
வேறு பெயர்கள்
ஐ222, சோடியம் பைசல்பைட்டு
இனங்காட்டிகள்
7631-90-5 Y
ChEBI CHEBI:26709 Y
ChEMBL ChEMBL1689285 N
ChemSpider 571016 Y
InChI
  • InChI=1S/Na.H2O3S/c;1-4(2)3/h;(H2,1,2,3)/q+1;/p-1 Y
    Key: DWAQJAXMDSEUJJ-UHFFFAOYSA-M Y
  • InChI=1/Na.H2O3S/c;1-4(2)3/h;(H2,1,2,3)/q+1;/p-1
    Key: DWAQJAXMDSEUJJ-REWHXWOFAL
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 23665763
வே.ந.வி.ப எண் VZ2000000
SMILES
  • [Na+].[O-]S(=O)O
பண்புகள்
NaHSO3
வாய்ப்பாட்டு எடை 104.061 கி/மோல்
தோற்றம் வெண்மையான திண்மம்
மணம் இலேசான கந்தக டைஆக்சைடு நெடி
அடர்த்தி 1.48 கி/செ.மீ3
உருகுநிலை 150 °C (302 °F; 423 K)
கொதிநிலை 315 °C (599 °F; 588 K)
42 கி/100மி.லி
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.526
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு தீங்கானது (Xn)
R-சொற்றொடர்கள் R22 R31
S-சொற்றொடர்கள் (S2), S25, S46
தீப்பற்றும் வெப்பநிலை தீப்பற்றாது
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்:
அனுமதிக்கத்தக்க வரம்பு
இல்லை[1]
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
TWA 5 மி.கி/மீ3[1]
உடனடி அபாயம்
N.D.[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் சோடியம் சல்பைட்டு
சோடியம்மெட்டாபைசல்பைட்டு
ஏனைய நேர் மின்அயனிகள் பொட்டாசியம் பைசல்பைட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references

சோடியம் பைசல்பைட்டு (Sodium bisulfite) என்பது NaHSO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். சோடியம் ஐதரசன் சல்பைட்டு என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. உண்மையில் சோடியம் பைசல்பைட்டு ஒரு சேர்மமாக கருதப்படுவதில்லை[2]. மாறாக, நீரில் கரைத்தால் சோடியம் அயனி, பைசல்பைட்டு அயனி போன்றவற்றை கொடுக்கும் உப்புக்களின் கலவையாக இது பார்க்கப்படுகிறது. வெண்மை நிறத்தையும் கந்தக டை ஆக்சைடின் நெடியையும் சோடியம் பைசல்பைட்டு பெற்றுள்ளது. முழுமையாக வரையறுக்கப்படாவிட்டாலும் கூட இதற்கு ஐரோப்பிய எண் 222 என்ற அடையாளம் வழங்கப்பட்டு உணவு கூட்டுசேர் பொருளாக வகைப்படுத்தப்படுகிறது.

தயாரிப்பு[தொகு]

சோடியம் ஐதராக்சைடு அல்லது சோடியம் பைகார்பனேட்டு போன்ற ஒரு பொருத்தமான காரத்துடன் கந்தக டை ஆக்சைடைச் சேர்த்து சூடுபடுத்தினால் சோடியம் பைசல்பைட்டு கரைசலைத் தயாரிக்கலாம்.

SO2 + NaOH → NaHSO3
SO2 + NaHCO3 → NaHSO3 + CO2

உருவாகும் கரைசலை படிகமாக்க எடுக்கப்பட்ட முயற்சிகளில் சோடியம் டைசல்பைட்டு (Na2S2O5) மட்டுமே கிடைக்கிறது.[3].

வினை மற்றும் பயன்கள்[தொகு]

ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் கலிபோர்னியாவின் சன்னிவேலிலுள்ள 25 % சோடியம் பைசல்பைட்டு தொட்டி.

கரைந்துள்ள ஆக்சிசனில் சோடியம் பைசல்பைட்டு நன்கு வினைபுரியுமென்பதால் தொழிற்சாலைகளில் இதை ஒடுக்கும் முகவராகப் பயன்படுத்துகிறார்கள்.

2 NaHSO3 + O2 → 2 NaHSO4

ஆக்சினேற்ற அரிப்பைத் தடுப்பதற்காக பொதுவாக பெரிய குழாய் அமைப்புகளில் இது சேர்க்கப்படுகிறது. உயிர்வேதியியல் பொறியியல் பயன்பாடுகளில் ஓர் அணு உலையில் காற்றில்லா நிலைமைகளைப் பராமரிப்பதற்கு இச்சேர்மம் உதவியாக இருக்கும். சல்பைட்டு உணவு மற்றும் பானங்கள் பாதுகாப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=சோடியம்_பைசல்பைட்டு&oldid=3520974" இருந்து மீள்விக்கப்பட்டது