பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்s
பொட்டாசியம் மாங்கனேட்டு(V)
பொட்டாசியம் டெட்ராக்சிடோமாங்கனேட்டு(3−)
பண்புகள்
K3MnO4
வாய்ப்பாட்டு எடை 236.23 கி மோல்−1
தோற்றம் அடர்நீல திண்மம்
λmax 670 நானோமீட்டர்
(ε = 900 dm3 மோல்−1 செ.மீ−1)
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் பொட்டசியம் மாங்கனேட்டு
பொட்டாசியம் பெர்மாங்கனேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டு (Potassium hypomanganate) என்பது K3MnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். பொட்டாசியம் மாங்கனேட்டு(V) என்ற பெயராலும் இதை அழைக்கிறார்கள். அடர்நீல நிறத்தில் உள்ள இவ்வுப்பு பொட்டாசியம் மாங்கனேட்டு(V) உப்புக்கு ஓர் அரிதான உதாரணமாகும்.

தயாரிப்பு[தொகு]

  • பொட்டாசியம்பெர்மாங்கனேட்டுடன் அதிக அளவு பொட்டாசியம் சல்பைட்டைச் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினால் பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டைத் தயாரிக்கலாம் [1]
MnO
4
+ SO2−
3
+ H2O → MnO3−
4
+ SO2−
4
+ 2 H+.
  • பொட்டாசியம்பெர்மாங்கனேட்டுடன் 10 மோல் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலிலுள்ள ஐதரசன்பெராக்சைடுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்[2]
2 MnO2−
4
+ H2O2 + 2 OH2 MnO3−
4
+ O2 + 2 H2O.
  • பொட்டாசியம்பெர்மாங்கனேட்டுடன் 3-10 மோல் பொட்டாசியம் ஐதராக்சைடு கரைசலிலுள்ள மேண்டலேட்டுடன் சேர்த்து ஒடுக்க வினைக்கு உட்படுத்தினாலும் இதைத் தயாரிக்கலாம்
2 MnO2−
4
+ C
8
H
7
O
3
+ 2 OH2 MnO3−
4
+ C
8
H
5
O
3
+ 2 H2O
  • மாங்கனீசு டையாக்சைடு பொட்டாசியம் ஐதராக்சைடின் அடர் கரைசலில் கரையும்போது விகிதச்சமமாதலின்மையால் பொட்டாசியம் ஐப்போமாங்கனேட்டு உருவாகிறது.
2 MnO2 + 3 OH → MnO3−
4
+ MnO(OH) + H2O.

ஐப்போமாங்கனேட்டு எதிர்மின் அயனி விகிதச்சமமாதலின்மையால் எல்லாவிடத்திலும் குறிப்பாக காரக் கரைசல்களில் நிலைத்தன்மையற்றதாக உள்ளது. pH 14 இல் மின்வாய் ஆற்றல் மதிப்பு பின்வருமாறு:[1] estimated electrode potentials at pH 14 are[3][4][5]

MnO2−
4
+ e is in equilibrium with MnO3−
4
   E = +0.27 V
MnO3−
4
+ e + 2 H2O is in equilibrium with MnO2 + 4 OH   E = +0.96 V

புரோட்டானேற்றம் பெற்ற ஓர் இடைநிலை வழியாகவே விகிதச்சமமாதலின்மை அடைதல் நிகழ்வதாக நம்பப்படுகிறது[5].

HMnO2−4 ⇌ MnO3−4 + H+ என்ற வினையின் காடித்தன்மை எண் மதிப்பு pKa = 13.7 ± 0.2[6]. இருப்பினும் K3MnO4 படிகமானது ஐப்போமாங்கனேட்டு அயனியின் புற ஊதா- கட்புல நிறமாலையியல் ஆய்வை அனுமதித்து Ca2Cl(PO4) உடன் இணைபடிகமாகிறது[7].

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Greenwood, Norman N.; Earnshaw, Alan (1984). Chemistry of the Elements. Oxford: Pergamon Press. பக். 1221–22. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-08-022057-6. http://books.google.co.nz/books?id=OezvAAAAMAAJ&q=0-08-022057-6&dq=0-08-022057-6&source=bl&ots=m4tIRxdwSk&sig=XQTTjw5EN9n5z62JB3d0vaUEn0Y&hl=en&sa=X&ei=UoAWUN7-EM6ziQfyxIDoCQ&ved=0CD8Q6AEwBA. .
  2. Lee, Donald G.; Chen, Tao (1989), "Oxidation of hydrocarbons. 18. Mechanism of the reaction between permanganate and carbon-carbon double bonds", J. Am. Chem. Soc., 111 (19): 7534–38, doi:10.1021/ja00201a039.
  3. Weast, Robert C., தொகுப்பாசிரியர் (1981). CRC Handbook of Chemistry and Physics (62nd ). Boca Raton, FL: CRC Press. பக். D-134. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0462-8. .
  4. Manganese – compounds – standard reduction potentials, WebElements, பார்க்கப்பட்ட நாள் 2010-06-26.
  5. 5.0 5.1 Sekula-Brzezińska, K.; Wrona, P. K.; Galus, Z. (1979), "Rate of the MnO4/MnO42− and MnO42−/MnO43− electrode reactions in alkaline solutions at solid electrodes", Electrochim. Acta, 24 (5): 555–63, doi:10.1016/0013-4686(79)85032-X.
  6. Rush, J. D.; Bielski, B. H. J. (1995), "Studies of Manganate(V), -(VI), and -(VII) Tetraoxyanions by Pulse Radiolysis. Optical Spectra of Protonated Forms", Inorg. Chem., 34 (23): 5832–38, doi:10.1021/ic00127a022.
  7. Carrington, A.; Symons, M. C. R. (1956), "Structure and reactivity of the oxy-anions of transition metals. Part I. The manganese oxy-anions", J. Chem. Soc.: 3373–80, doi:10.1039/JR9560003373.