மாங்கனோசின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாங்கனோசின்
Manganocene.svg
இனங்காட்டிகள்
73138-26-8 Yes check.svgY
பப்கெம் 24199707
பண்புகள்
C10H10Mn
வாய்ப்பாட்டு எடை 185.13 g·mol−1
தோற்றம் அம்பர் மஞ்சள் திண்மம் < 159 °செ,இளஞ்சிவப்பு > 159 °செ
உருகுநிலை
கொதிநிலை 245 °C (473 °F; 518 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு ஊறு விளைவிக்கும் Xn Highly Flammable F
R-சொற்றொடர்கள் R11, R14, R20/21/22, R36/37/38
S-சொற்றொடர்கள் S16, S26, S36/37/39
தீப்பற்றும் வெப்பநிலை 52 °C (126 °F; 325 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Yes check.svgY verify (இதுYes check.svgY/N?)
Infobox references

மாங்கனோசின் (Manganocene) என்பது [Mn(C5H5)2]n என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம மாங்கனீசு சேர்மமாகும். இது பிசு(சைக்ளோபென்டாடையீனைல்) மாங்கனீசு(II) என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. இதுவொரு வெப்பநிறமியல் திண்மமாகும். காற்றில் விரைவாக சிதையும் இச்சேர்மம் சிறிது படன்பாடுகளையும் கொண்டுள்ளது. பெரும்பாலும் அயனிப்பண்பு கொண்ட மெட்டலோசின் எனப்படும் சைக்ளோபென்டாடையீனைல் எதிர்மின் அயனிகளுக்கு உதாரணமாக கருதப்படுகிறது[1].

தயாரிப்பும் கட்டமைப்பும்[தொகு]

மாங்கனீசு(II) குளோரைடுடன் சோடியம் சைக்ளோபென்டாடையீனைடு சேர்த்து பிற மெட்டலோசின்கள் தயாரிப்பது போன்றே இதுவும் தயாரிக்கப்படுகிறது.

MnCl2 + 2 CpNa → Cp2Mn + 2 NaCl

திண்ம நிலையில் -159 ° செல்சியசு வெப்பநிலைக்குக் கீழாக மாங்கனோசின் பலபடி கட்டமைப்பை ஏற்கிறது. ஒவ்வொரு மாங்கனீசு அணுவும் மூன்று சைக்ளோ சைக்ளோபென்டாடையீனைல் ஈந்தணைவிகளால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. இவற்றில் இரண்டு ஈந்தனைவிகள் -159 ° செல்சியசு வெப்பநிலைக்கு மேல் பாலம் அமைப்பவையாகும். இத்திண்மம் அம்பர் மஞ்சள் நிரத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறுகிறது. பலபடியானது சதாரணமான உடுக்கை அணைவுக் கட்டமைப்புக்கு (Mn(η5-C5H5)2) மாற்றப்படுகிறது[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Richard A. Layfield "Manganese(II): the black sheep of the organometallic family" Chem. Soc. Rev., 2008, vol. 37, pp. 1098-1107.எஆசு:10.1039/B708850G
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாங்கனோசின்&oldid=3351768" இருந்து மீள்விக்கப்பட்டது