அமோனியம் பெர்மாங்கனேட்டு
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
அமோனியம் மாங்கனேட்டு(VII)
| |
வேறு பெயர்கள்
அமோனியம் பர்மாங்கனேட்டு
| |
இனங்காட்டிகள் | |
13446-10-1 | |
ChemSpider | 55512 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 61604 |
| |
UN number | 3085, 1482 |
பண்புகள் | |
NH4MnO4 | |
வாய்ப்பாட்டு எடை | 136.974 கி/மோல் |
தோற்றம் | சாய்சதுர ஊசிபோன்ற படிகங்கள் அல்லது ஊதாப்பழுப்பு தூள் அல்லது அடர் ஊதா |
அடர்த்தி | கி/செ.மீ3, திண்மம் |
உருகுநிலை | சிதைவடையும் |
8.0 கி/100 மி.லி, 15 °செல்சியசில் | |
கட்டமைப்பு | |
படிக அமைப்பு | செஞ்சாய்சதுரம் |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
கியூ.மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
யூ.கெ−1.மோல்−1 |
தீங்குகள் | |
முதன்மையான தீநிகழ்தகவுகள் | ஆக்சிசனேற்றி (O), தீங்கானது (Xn), சுழலுக்கு அபாயமானது (N) |
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் | [ External MSDS] |
தொடர்புடைய சேர்மங்கள் | |
ஏனைய எதிர் மின்னயனிகள் | அமோனியம் பெர்ரினேட்டு |
ஏனைய நேர் மின்அயனிகள் | சோடியம் பர்மாங்கனேட்டு; பொட்டாசியம் பர்மாங்கனேட்டு |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அமோனியம் பர்மாங்கனேட்டு (Ammonium permanganate) என்பது NH4MnO4, அல்லது NH3•HMnO4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிமச் சேர்மம் ஆகும். தண்ணீரில் கரையக்கூடிய இச்சேர்மம் ஒரு வலிமையான ஆக்சிசனேற்றியும் மிதமான ஒரு வெடிபொருளுமாகும். உலர்ந்த நிலையிலுள்ள அமோனியம் பர்மாங்கனேட்டு வெப்பம், அதிர்ச்சி அல்லது உராய்வு போன்ற செயல்களால் வெடிக்க நேரிடும். சுமார் 60 பாகை செல்சியசு அல்லது 140 பாகை பாரன்கீட்டு வெப்பநிலையில் இச்சேர்மம் வெடிக்கலாம் [1].
வெடிக்கும்போது அமோனியம் பர்மாங்கனேட்டானது மாங்கனீசு டை ஆக்சைடு, நைட்ரசன் மற்றும் தண்ணீராகச் சிதைவடைகிறது.
- 2 NH4MnO4 → 2 MnO2 + N2 + 4 H2O.
1824 ஆம் ஆண்டு முதன்முதலில் இல்லார்டு மிட்செர்லிச் அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரித்தார். இதற்காக வெள்ளி பெர்மாங்கனேட்டுடன் சம மோலார் அளவு அமோனியம் குளோரைடை வினைபுரியச் செய்தார். வினையில் உருவான வெள்ளி குளோரைடை வடிகட்டிப் பிரித்தார். நீரை ஆவியாக்கி அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரித்தார். இதே முறையில் பேரியம் பர்மாங்கனேட்டு மற்றும் அம்மோனியம் சல்பேட்டு சேர்மங்களை வினைபுரியச் செய்தும் அமோனியம் பர்மாங்கனேட்டைத் தயாரிக்கிறார்கள்.
சாதாரண வெப்பநிலையிலும் அமோனியம் பர்மாங்கானேட்டு மெதுவாக சிதைவடைகிறது. 3 மாதங்களுக்கு சேமித்து வைக்கப்பட்ட ஒரு மாதிரியானது 96% மட்டுமே தூய்மைநிலையில் இருக்கும். 6 மாதங்களுக்கு பிறகு இதுவே அயோடினின் நிறத்தையும் நைட்ரசன் ஆக்சைடுகளின் மணத்தையும் பெறுகிறது. வெப்பத்தால் சிதைவடையும்போது நச்சுப்புகையை வெளியிடுகிறது [2].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MSDS Chemical Information File: Ammonium Permanganate". February 1988.
- ↑ Encyclopedia of Explosives and Related Items 8. (1978).